ஒரு பேனாவின் விலை ரூ 16 லட்சமாம்! ஒரு காரே வாங்கிடலாமே! அப்படி என்ன இருக்கிறது அந்த பேனாவில்!
சென்னை:சென்னையில் பேனா கண்காட்சி நடைபெறவுள்ள நிலையில் ஒரு பேனா ரூ 16 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறதாம். அப்படி அந்த பேனாவில் என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம்.
கத்தி முனையை விட கூர்மையானது பேனாக்களின் முனை என சொல்வார்கள். அது போல் பேனாக்களில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஒவ்வொரு பேனாக்களும் ஒவ்வொரு விதமாக எழுதும். நாம் பயன்படுத்தும் பேனாவை மட்டும் யாருக்கும் கொடுக்கக் கூடாது.

ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு செல்லும் பேனா அவர்களுக்கு சரியாக எழுதாது, இல்லாவிட்டால் கையெழுத்து நன்றாக இல்லாமல் போய்விடும். அந்த காலத்தில் பவுன்டைன் பேனாதான் காஸ்ட்லி பேனா என்பார்கள்.
அந்த பேனாவை வைத்திருந்தாலே கெத்துதான். சென்னை பாரிமுனையில் பேனாக்களுக்கு என தனிக்கடைகள் இருக்கும். அங்கு 50 பைசா முதல் லட்சக்கணக்கில் வரை பேனாக்கள் விற்பனை ஆகும். இந்த ஒவ்வொரு பேனாவின் பின்பும் ஒரு வரலாறு இருக்கும். சிலர் புது வகையான பேனாக்களை சேர்த்து வைப்பதை கூட பொழுதுப்போக்காக செய்து வருவார்கள்.
இந்த நிலையில் சென்னை அடையாறில் (மலர் மருத்துவமனைக்கு பின்புறம்) பேனா கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி வரும் 8ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சிக்கு வர அனுமதி இலவசம். இங்கு கண்காட்சிக்கு 30- க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட பிராண்டுகளை சேர்ந்த பேனாக்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
அது போல் விற்பனைக்காக 25 ஆயிரத்திற்கும் அதிகமான பேனாக்கள் வைக்கப்படுகிறது. Endless, Ranga, lotus, ASA, Sheaffer, Sailor, Fountain, Pilot உள்ளிட்ட பிராண்ட் பேனாக்களும் விற்பனைக்கு வருகின்றன. இந்த கண்காட்சியில் ஒரு பேனாவின் விலை மட்டும் ரூ 16 லட்சத்திற்கு விற்பனையாகவுள்ளது. அப்படி 16 லட்சத்தில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.
லம்போர்கினி கார் தெரியும் இல்லையா, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பேனாதான் இந்த விலைக்கு விற்கப்படுகிறது. ஒரு பேனா வாங்கும் காசில் விலை உயர்ந்த டாப் மாடல் காரையே வாங்கிவிடலாம். அப்படி எந்த பேனாவில் என்னதான் இருக்கிறது. இது போர் வீரர் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
லம்போர்கினி கார் தயாரிக்கும் போது மீதமாகும் பொருட்களை கொண்டு இந்த பேனா தயாரிக்கப்படுகிறது. இதன் நிறத்தை பார்த்தாலே வாங்கத் தூண்டும் அளவுக்கு இருக்கிறது. அது போல் மகோபா நிறுவனத்தின் பேனாக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பேனாக்களின் விலை ரூ 2000 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications