குலை உதறுது.. லித்தியம் பேட்டரியுடன் லிஃப்ட்டில் நுழைந்த நபர்.. அடுத்த நொடி நடந்ததை பாருங்க, வீடியோ
சென்னை: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்து வருகிறது.. இந்த நபர் யார்? இவருக்கு லிஃப்ட்டில் என்ன நடந்தது?
எப்போதுமே லிஃப்ட்டில் செல்பவர்கள் சில விஷயங்களில் கவனமாக செல்ல வேண்டும்.. லிப்ட் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதன் கதவுகளை எக்காரணம் கொண்டும் கையினாலோ, கூர்மையான கருவிகளை கொண்டு திறக்கவோ அல்லது தடுக்கவோ கூடாது...

பொருட்கள்: அதேபோல பயணிகளுக்கான லிப்டில் மிகவும் அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதைவிட முக்கியமாக, பொருட்களை கொண்டு செல்வதற்குரிய லிப்ட்தான் இதற்கு பயன்படுத்த வேண்டும்.
லிப்ட் பாதி வழியில் நின்று விட்டால், வெளியில் இருப்பவர்கள் வந்து திறந்து விடும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டுமே தவிர சுயமாக எந்த முயற்சியும் செய்யக்கூடாது. அப்பார்ட்மென்ட்களில் குழந்தைகள் தனியாக லிப்ட்டை இயக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கும். எனவே, கூடுமானவரை குழந்தைகள் தனியாக லிப்டை இயக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது.
லிப்ட் தயாரிப்பாளர்கள்: லிப்ட் பயன்படுத்துபவர்களது பாதுகாப்பை கருத்தில்கொண்டுதான், அரசு மின்தூக்கி சட்டம் 1997-ன் படி விதிமுறைகளை இயற்றி உள்ளது... அதன்படி லிப்ட் தயாரிப்பாளர்கள் முறையான விதிமுறைகளின்படியே அமைக்க வேண்டும்.. குறிப்பாக, 3 மாதங்கள், 5 மாதங்களுக்கு ஒருமுறை லிப்டை முழுமையாக சர்வீஸ் செய்ய வேண்டும். கேபிள்கள், ஒயர்கள் உள்ளிட்ட இதர மின் இணைப்புகளை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஹீட் மற்றும் ஸ்மோக் டிடெக்டர் போன்ற பாதுகாப்பு கருவிகள் லிப்டில் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். அதன் மூலம் எதிர்பாராத சமயங்களில் மின் கசிவால் உண்டாகும் நெருப்பின் பாதிப்புகளை கண்டறிந்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

துயர சம்பவம்: ஆனாலும் இதோ ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.. மின்னணு சாதனங்கள், மின்சார கார்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் போன்றவைகள் சமீபகாலமாகவே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன..
எனினும் இதுகுறித்த முறையான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு இல்லாமலேயே பொதுமக்கள் அதனை கையாண்டு வருகிறார்கள்.. அப்படித்தான், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இத்தனை நாளும் வெளிவராத இந்த சம்பவம் தற்போதுதான் வீடியோவாக வெளியாகி, அனைவரையும் கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது.
பேட்டரி: அந்த வீடியோவில், நபர் ஒருவர் லித்தியம் பேட்டரியை எடுத்துக்கொண்டு லிஃப்ட்டுக்குள் நுழைகிறார்.. அந்த லிப்ட்டில் அவரை தவிர வேறு யாருமில்லை.. லிப்ட் கதவு மூடப்பட்ட அடுத்த செகண்டே, அந்த லித்தியம் பேட்டரி வெடித்து சிதறி தீப்பிடித்துவிட்டது.. கதவு மூடப்பட்டதால் அந்த நபரால் வெளியே வரமுடியவில்லை.. லிப்ட்டுக்குள்ளேயே பட்டாசு போல படபடவென வெடிக்கும் சத்தம் மட்டும் வெளியே கேட்கிறது..
இதனால் லிப்ட்-க்கு வெளியே காத்திருந்தவர்கள், பதறிப்போனார்கள்.. அவர்களாலும் உள்ளே எளிதாக நுழைய முடியவில்லை.. இதனால், அங்கிருந்த செக்யூரிட்டிகளை அழைத்து வந்தனர்.. அவர்கள் வந்து, லிப்ட் கதவை திறந்து பார்த்தபோது, லிஃப்ட்டுக்குள்ளேயே அந்த நபர் உடல்கருகி விழுந்து கிடந்தார்.. இந்த வீடியோ நெட்டிசன்களால் இப்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பேட்டரி ஏன் வெடித்தது: ஆனால், இந்த பேட்டரி ஏன் வெடிக்கிறது? எப்போதுமே பேட்டரி அதிகமாக வெப்பமடையும்போது, ஒரு ரசாயன சங்கிலி எதிர்வினை ஏற்படுகிறது.. அதனால், இது இன்னும் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது.. இது பேட்டரியில் இருக்கும் எரியக்கூடிய பொருட்கள் தீப்பிடிப்பதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.. பேட்டரியில் உள்ள ஒரு குறுகிய சுற்று, தீவிர மற்றும் விரைவான வெப்பத்தை உருவாக்கலாம்.. இது வெடிப்பு செயல்முறையைத் தூண்டும் என்கிறார்கள்.
எனவே, லித்தியம் பேட்டரிகளை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவதும் மற்றும் பாதுகாப்பு பரிந்துரைகளை கடைபிடிப்பதும் அவசியம் என்று அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications