லுலு மால்.. சென்னையில் இங்கேயே வருது? அப்ப ஈஞ்சம்பாக்கத்தில் இல்லையா? இன்னொரு புது மால்? மகிழ்ச்சி
சென்னை: சென்னையில் ஈஞ்சம்பாக்கத்தில் லுலு மால் வரப்போவதாக சொன்ன நிலையில், புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. என்ன அது?
கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் பொதுமக்களின் ஆதரவை அபரிமிதமாக பெற்றுள்ளது.. இதனால் பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல் எந்நேரமும் கூட்டம் நிறைந்தவாறே காணப்படுகிறது. அதனால்தான், கோவையில் உணவுப்பதப்படுத்தும் மையத்தையும் கொண்டுவர லுலு நிறுவனம் முயன்று வருகிறது.

அதேபோல, சென்னையில் லுலு மால் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு வணிகர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்தபோதும், சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக லுலு அமைக்கப்படும் என்று அந்நிறுவனம் தொடர்ந்து சொல்லி வருகிறது.
கோயம்பேடு: ஒருவேளை லுலு மால் சென்னையில் வந்தால் எங்கே கட்டப்படும் என்ற ஆர்வம் கிளம்பியது. அதற்குள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் லுலு வரப்போவதாக சொன்னார்கள். அதிலும், பாமக தலைவர் இதற்கு கண்டனம் தெரிவித்து, அறிக்கையே வெளியிட்டிருந்தார்.
ஆனால், இதற்கு தமிழக அரசு உடனடியாக விளக்கம் தந்து, அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கு பிறகு கோயம்பேடு லுலு விவகாரம் அடங்கியது. பிறகு, ஓஎம்ஆர் ரோட்டில், ஈஞ்சம்பாக்கத்தில் லுலு மால் வரும் என்றார்கள். பாஷ்யம் நிறுவனம் வாங்கியிருக்கும் நிலையில், பிரார்த்தனா தியேட்டர் இருந்த இடத்தில் இந்த மால் வரப்போவதாக சொன்னார்கள்.
ஈஞ்சம்பாக்கம்: ஆனால், இப்போது ஈஞ்சம்பாக்கத்திலும் லுலு மால் வர வாய்ப்பில்லையாம்.. மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தேர்வு செய்து அங்கே கட்டலாம் என முடிவாகி உள்ளாம். அதனால், சென்னையில் மத்தியிலேயே, லுலு மாலை அமைக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் எந்த இடம் என்பது உறுதியாகாவிட்டாலும், வரும் 2025-ம் ஆண்டுக்குள் லுலு மால் சென்னையில் அமைக்கப்பட இருப்பதாக லுலு நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
சபாஷ்: இந்த லுலு மால் போலவே, இன்னொரு மால் சென்னைக்கு வரப்போகிறதாம்.. அதாவது, சென்னை எஸ்ஆர்பி சிட்டியில் புதிய மால் வர உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.. மால் ஆப் மெட்ராஸ் என்ற பிரபலமான மால், வரப்போகிறாம்.. அதுவும், சென்னையின் முக்கிய இடத்தில் வரப்போகிறதாம்.
கிட்டத்தட்ட 1.2 மில்லியன் சதுர அடியில் இந்த மால் கட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.. அத்துடன், PVR சினிமா தியேட்டரும் கட்ட போகிறார்களாம்.. அதுவும், 9 தியேட்டர்கள் வரப்போகிறதாம்..
குஷி சென்னை: இவைகளை தவிர, பேண்டலூன்ஸ், மேக்ஸ், டிரெண்ட்ஸ், போன்ற பிரபல கடைகளையும் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஒருபக்கம் லுலு மால், இன்னொரு பக்கம் புது மால் என டபுள் மால் வரப்போகும் குஷியில் சென்னைவாசிகள் உள்ளனராம்..!!
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications