ஒடிசாவை கலக்கும் 5T மாடல்! ஊழல், லஞ்சம் இல்லை! ஒரு தமிழன் போட்ட மெகா ப்ளான்!
சென்னை: ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நாடே திரும்பிப் பார்க்கும்படி தனது ஆட்சியில் 5T model என்ற ஒரு அற்புதமான திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார்.
கடந்த 2014இல் 'குஜராத் மாடல்' என்ற ஒரு மந்திரச் சொல்லை முன்வைத்துத்தான் மோடி பிரதமராக முன்னிறுத்தப்பட்டார். அவரது ஆட்சியில் குஜராத் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக ஊடகங்கள் அதற்கு முன்பு பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தன.

ஆகவே, அவர் பிரதமராக வந்தால் நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதற்காக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.
அதே பாணியில் கடந்த 2021இல் ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் 'திராவிட மாடல்' என்று தனது ஆட்சியை அடையாளப்படுத்தினார். அதற்கு வலுமை சேர்க்கும் திட்டங்களை அவர் உருவாக்கினார்.
திராவிடக் கட்சிகளின் தாய் கட்சியான நீதிக்கட்சி ஆட்சியில் மெட்ராஸ் பிரசிடென்சி மாகாணத்தில் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய சாப்பாடு வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 100 ஆண்டுகளை நினைவுபடுத்தும் வகையில் பள்ளிக் குழந்தைகளிற்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத் திராவிட மாடல் என்று அழைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இந்த மாடல்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஒரு மாடல் எந்த விளம்பரமும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அந்த மாடல் என்ன? அது எந்த மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது என்பது பலருக்கும் தெரியாது. 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி அந்த மாடல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதற்குப் பெயர் 5T model. இதை உருவாக்கியவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். கடந்த 24 ஆண்டுகளாக இந்த மாநிலத்தின் முடிசூடா மன்னனாக வலம் வரும் இவர், சைலண்ட் ஆக அந்த மாநிலத்தில் பல முன்னேற்றங்களைச் செய்துள்ளார்.
இவரது திட்டங்களுக்குப் பின்னால் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியனின் மூளை இருக்கிறது. அவரும் இந்த 5T model திட்டத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த 5T model மாடல் ஒடிசாவை பலதுறைகளில் தொழில்நுட்ப புரட்சியைக் கொண்டுவந்துள்ளது. சாதாரண அரசுப் பள்ளி தொடங்கு தலைமைச்செயலக செயல்பாடு வரை இந்த மாடலை நவீன் பட்நாயக் அரசு செய்துக் காட்டியதன் வெற்றியின் அடையாளமாகவே விகே பாண்டியன் இன்று மக்களவைத் தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
அவரை டார்கெட் செய்து மோடியும், அமித்ஷாவும் வீழ்த்த நினைக்கும் பின்னணியில் இந்த வளர்ச்சி திட்டத்தின் வெற்றிக்கதை இருக்கிறது. அது என்ன 'ஃபைவ் டி மாடல்' என்பது குறித்து விகே பாண்டியன் விளக்கி இருக்கிறார்.
பாண்டியன் அது பற்றிப் பேசுகையில், "இந்தத் திட்டம் ஒடிசா முதல்வரின் சிறப்பான ஐடியா. இதில் ஐந்து கொள்கைகளை அரசு முன்வைத்துள்ளது. அவை என்னவென்றால், டீம் ஒர்க். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் குழுவாகச் சேர்ந்து செய்வது. அடுத்து தொழில்நுட்பம். ஒவ்வொரு திட்டத்திலும் அட்வான்ஸ் டெக்னாலஜியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது.
மூன்றாவது, வெளிப்படைத்தன்மை. அதாவது அரசு ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கி வேலை தொடங்குகிறது என்றால் அதை முழுமையாக மக்களுக்கு எடுத்துச் சொல்வது. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் யார் ஒப்பந்தம் கேட்டார்கள்? யார் யார் அதைச் செய்ய இருக்கிறார்கள்? இப்படியான அனைத்து தகவல்களும் மக்கள் தெரிந்து கொள்ளும்படி ஒரு வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பது.
நான்காவது கால வரம்பு. ஒரு திட்டத்தை முதல்வர் தொடங்கும் அன்றே அது என்று மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பதை அறிவித்துவிடுவோம். அது குறித்த காலத்திற்கு முடிக்கப்பட வேண்டும். அதில் மாற்றம் இருக்கக் கூடாது.
ஒரு வேலையைத் தொடங்கி 5 ஆண்டுகள் வரை இழு இழு என்று இழுத்துக் கொண்டு இருக்கக்கூடாது. வேலை தொடங்கி முடித்த பிறகு அதன் தரம் நிர்ணயிக்கப்பட்டதைப்போல் உள்ளதா? என்பதை அதிகாரிகள் சோதித்துச் சான்றளிப்பது.
இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் 5T model. இதை ஒடிசா அரசு அமைத்து துறைகளிலும் செயல்படுத்தி இருக்கிறது.
உதாரணமாகச் சொன்னால், தனியார்ப் பள்ளிகளின் தரம் அரசுப் பள்ளிகளைவிட மேலானதாக உள்ளது. ஒடிசாவில் ஏழை மக்கள் அதிகம். 75% குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படித்து வருகிறார்கள். அவர்களால் தனியார்ப் பள்ளியில் தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாது.

ஒவ்வொரு குழந்தையின் கல்வியும் மாநில வளர்ச்சிக்கு முக்கியம். ஆகவே உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தையும் நாங்கள் டிஜிட்டல் மயமாக்கிவிட்டோம். பள்ளிகளில் கரும்பலகையே கிடையாது. அனைத்தும் டிஜிட்டல் போர்டுதான்.
அதே போல அறிவியல் கூடங்கள் அனைத்தும் மாடர்ன் சயின்ஸ் லேப் ஆக மாற்றப்பட்டுவிட்டது. நூலகங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகப்பட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ள 8560 உயர்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் இந்த மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இதற்காகச் செலவு செய்யப்பட்டது எவ்வளவு? வாங்கிய பொருள்கள் என்ன? என்பது போன்ற அனைத்து விவரங்களும் தெரிவிக்க வேண்டும். ஒரு ஆயா அம்மாவாக இருந்தாலும் அவருக்கும் இந்த விவரங்கள் சொல்லப்பட்ட வேண்டும்.
அடுத்து முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் படித்துவிட்டு முன்னேறி இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் உதவியையும் பெற்று பள்ளியை முன்னேற்றுகிறோம். அதாவது பஞ்சாயத்து உறுப்பினர் தொடங்கி ஊர்த் தலைவர் அவரையும் பள்ளி வளர்ச்சிக்காகப் பணி செய்ய ஒரு குழுவை உருவாக்கி, பள்ளியில் கட்டப்படும் கட்டடம், வாங்கப்படும் பொருள்கள் பற்றிய தரம் ஆகியவற்றைக் கண்காணிக்க வைக்கிறோம்.

இதனால் ஊழல் தடுக்கப்படுகிறது. தரமற்ற பொருள்களைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டங்கள் தடுக்கப்படுகின்றன. அதேபோல் உள்ளூர் மக்களின் கண்காணிப்பு தொடர்ந்து இருப்பதால் குறித்த நேரத்தில் திட்டம் முழுமையாக முடிக்கப்படுகிறது.
இந்த மாதிரியான ஒரு மாற்றத்தை ஒடிசா அரசு செய்துள்ளது. அதற்குப் பெயர்தான் 5T model. இதில் அரசின் முயற்சி இருப்பதைப் போலப் பொதுமக்கள் பங்களிப்பும் சேர்ந்தே இருக்கிறது" என்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications