செடி, கொடிகளை வைத்திருக்கிறீர்களா? அப்படின்னா இந்த APP உங்களுக்குத்தான்!
சென்னை: வீட்டில் செடி கொடிகளை வைத்திருக்கிறீர்களா அப்படியென்றால் உங்களுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும்.
எங்காவது செடி, கொடிகளை பார்த்திருப்போம். அது அழகாக இருக்கும். ஆனால் அது எந்த வகையான செடி என்பது நமக்கு தெரியாது. இதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டாலும் அது என்னவென தெரியலை. எப்போதோ வாங்கியது என்பார்கள்.

அது போல் ஒரு சில செடிகளின் பயன்கள் கூட தெரியாமல் இருக்கும். அவர்களுக்காக வந்துள்ளது, Plantify App. இதை ஆப்பிள் போனிலும் ஆன்ட்ராய்டு போனிலும் பதிவிறக்கம் செய்து கொண்டு அதில் உள்ள கூகுள் லென்ஸ் , செடியை புகைப்படம் எடுத்தாலே போதும்.
அந்த செடி எந்த பகுதியில் அதிகமாக இருக்கிறது. அதன் அறிவியல் பெயர் என்ன, அந்த தாவரத்தின் விவரங்கள் அடங்கிய விக்கிபீடியாவின் இணைப்பு, அந்த தாவரத்தின் அமைப்பை போன்றே உள்ள தாவரங்கள், அதன் தண்டு, பூ, இலை, காய், கனி அனைத்தின் படங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் எடுக்கும் போட்டோ செடியா, மலரா, பட்டையா, இலையா என்பதை கூட அந்த ஆப்பில் சொல்லிவிடுமாம். மேலும் சிலர் செடிகளுக்கு ஏராளமான தண்ணீரை விடுவார்கள். இதனால் அதன் வேர்கள் அழுகும் நிலை இருக்கும். பொதுவாக செடியின் ஈரத்தன்மையை பார்த்துதான் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
எனவே இந்த செயலியை பயன்படுத்தி ஒரு செடிக்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை எவ்வளவு அளவில் தண்ணீரை ஊற்றலாம் என்பது குறித்து அறியலாம். உதாரணமாக ஸ்னேக் பிளாண்ட்டை ஸ்கேன் செய்த போது அதன் பெயர், அதன் தாவரவியல் பெயர், அதற்கு வாரந்தோறும் 200 மில்லி தண்ணீர் விட வேண்டும் என்பன போன்ற விவரங்கள் வரும். எனவே இந்த செயலியை வைத்து ஒரு பூ, மரம், செடியின் பயன்களையும் அது எதற்காக பயன்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அது போல் மரப்பட்டைகளையும் கண்டறிந்து கொள்ளலாம். ஆனால் இது போன்ற செயலி குறித்து இரு வேறு கருத்துகள் வருகின்றன. ஒரு சிலர் இந்த செயலி சரியாக கணிக்கிறது என்கிறார்கள். மற்றும் சிலரோ இந்த செயலியில் செடியை புகைப்படம் எடுத்து அனுப்பி சோதனை செய்தால், அது தவறான ரிசல்ட்டை காட்டுவதாக தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications