இந்த ஆவணங்கள் இருந்தாலே போதும்.. வீடு இல்லாதவர்களுக்கும் இலவச வீடு கிடைக்கும்.. அசத்தலான திட்டம்
சென்னை: வீடு இல்லாதவர்களுக்கும் இலவச வீடு பெறக்கூடிய திட்டம்தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமாகும்.. அந்த திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு என்ன? ஆவணங்கள் என்னென்ன தேவைப்படும் தெரியுமா?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது, கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்தும் சிறந்த திட்டமாகும்.. வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டம் இதுவாகும்.

கிராமப்புற மக்கள்: கடந்த 2016ல் இந்த பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.. கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றும்வகையில், அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதே மத்திய அரசின் நோக்கமாகும்..
அதன்படி, வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.. இந்த திட்டத்தின்கீழ், நகர்ப்புறம், கிராமப்புறம் என்று 2 பிரிவுகள் உள்ளன.. அதிலும், 75 சதவீதம் எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை மக்களுக்கானது என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும். அதேபோல, 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு சொந்தமானதாகும்..
மானிய தொகை: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வட்டி விகிதம் மிகவும் குறைவு. வருமானத்திற்கு ஏற்ப மானியத்தின் அளவும் மாறுபடுகிறது.. வீட்டின் அளவை பொறுத்தும் மானிய தொகை வழங்கப்படும். கடனை திருப்பி செலுத்துவதற்காக 20 வருடங்களுக்கு அவகாசமும் வழங்கப்படுகிறது..
இந்த திட்டத்தின்கீழ் கட்டித்தரப்படும் வீடுகளில் கழிப்பறை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, எல்பிஜி சிலிண்டர் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவை பயன்படுத்த, ஒருசில நிபந்தனைகளும் உள்ளன..
நிபந்தனைகள்: குறிப்பாக, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பயனாளியில் கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளும் இருக்கலாம்.
விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்... குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், குடும்ப வருமானம் வருடத்துக்கு ரூ.18 லட்சத்திற்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும். அதற்கு மேல் வருமானம் இருந்தால் இந்த திட்டத்திற்கு தகுதியானவர் கிடையாது... இதேபோல, விண்ணப்பதாரர் பெயரில் இதற்கு முன்பாக எந்தவொரு வீடும் இருக்கக்கூடாது.
அரசு பணிகள்: விண்ணப்பத்தாரர் குடும்பத்தில் இருக்கும் யாரும் அரசுப்பணியில் இருக்கக்கூடாது. இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.50 ஆயிரமும், 2வது தவணையாக ரூ.1.5 லட்சமும், இறுதி தவணையாக ரூ.50 ஆயிரமும் பெறப்படுகிறது. அடையாள அட்டை, முகவரி மற்றும் வருமான சான்று மற்றும் சொத்து ஆவணங்கள் போன்றவற்றை ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வாயிலாக பயன்பெற வேண்டுமானால், ஆன்லைனில் PMAY - https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம். அதேபோல ஆஃப்லைனிலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கடன் உதவி: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு சமீபத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2023 மார்ச் 31ம் தேதி காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அந்தக்காலக்கெடு 2024 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் நிரந்தரமான வீடுகளை பெற பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பேருதவி புரிகிறது. நகர்ப்புற வீடுகளில் ரூ. 2.2 லட்சம் கோடி அதிகரிப்பை மத்திய அரசு முன்மொழிந்துள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ம் தேதி, தன்னுடைய 7வது பட்ஜெட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் ஒரு பகுதியாக 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று உறுதியும் அளித்திருப்பது வாடகை வீட்டில் வசிப்போருக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
வீடுகளை கட்டி வேகமாக முடிப்பது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் ஒதுக்கீடுகளை தருவது, அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் நேரத்தில் நிதியை விடுவிப்பது இவையெல்லாம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications