ஐய்யய்யோ! நைட் தூங்கும் போது உங்களை பேய் வந்து அழுத்துதா? நிமிரவே முடியலையா? உண்மை என்ன?
சென்னை: தூங்கும்போது நம்மை ஏதோ அழுத்துவது போல் இருக்கும், நாமும் பேய்தான் அழுத்துகிறது என நினைப்போம். ஆனால் உண்மையில் பேய்தான் நம்மை அழுத்துகிறதா என்பதை பார்ப்போம்.
தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென நம்மை ஏதோ அழுத்துவது போல் இருக்கும். நம்மால் திமிர கூட முடியாது. அந்த அளவுக்கு பயங்கரமாக அழுத்தம் இருக்கும். இது வீட்டில் சொன்னால், வாசலுக்கு நேரா படுக்காதேனு சொன்னா கேக்குறியா, விட்டத்திற்கு நேரா படுக்கக் கூடாதுனு எத்தனை வாட்டிதான் சொல்றது என பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்.
இதனால் நாமும் பேய்தான் அழுத்துகிறது என நம்பி கொண்டிருக்கிறோம். ஆனால் விஞ்ஞான ரீதியில் இதற்கு ஒரு காரணம் உள்ளதாக சொல்லப்படுகிறது. தூக்கத்தில் ஏற்படும் ஒரு வித பக்கவாதம் என்கிறார்கள்.

பேய் அழுத்துது
அது குறித்து பாக்டீரியா எனும் ட்விட்டர் ஹேண்டிலில் கூறியிருப்பதாவது: தூங்குறப்போ.... அடிக்கடி என்னைய பேய் வந்து அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்லிக் கேட்டுருப்போம்..! அவ்வளவு ஏன்..? நம்மில் பலருக்கும் அந்த அனுபவமும் கூட இருக்கும்..! அது ஏன்..? உண்மையிலயே பேய் தான் வந்து அமுக்குகிறதா..? பாப்போம் வாங்க..! மனித உறக்கத்தில் இரண்டு நிலை உண்டு. ஒன்று விரைவான கண் அயர் இயக்கம் (RAPID EYE MOVEMENT)மற்றொன்று அதற்கு எதிர்பதம் (NonREM). நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM.

மனித உறக்கம்
அடுத்து REM நிகழும்.! இப்படி இரண்டுமே மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம். ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும். அப்போது சுயநினைவும் முழுவதும் மங்கியிருக்கும். NREM முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும்.

கனவுகளும் தோன்றும்
கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள் உடல் இன்னும் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.! REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது..
அந்த சுழற்சி முடிவதற்குள் சிலநேரம் உங்களுக்கு சுயநினைவு தோன்றினால்.. உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது. மூளை விழித்திருக்கும். ஆனால் மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்காது.

மூளையில் பேய் நினைப்பு
அப்போதுதான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகாலை அசைக்க ட்ரைப் பண்றேன். ஆனா என்னால முடியலயே பேய் வந்து அமுக்குது போல" என்று.! சிலநேரம் அதற்கு தோதாக நமது மூளையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கனவும் பேய் நினைப்புக்கு சென்று ஒரு பேயையும் கனவில் கொண்டு வந்து காட்டும்..! SLEEP PARALYSIS - என்பதுதான் உங்களை வந்து அமுக்கிய பேய்.! உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை.! உலகமெங்கும் நெறய மக்களுக்கு இந்த "sleep paralysis" நிகழ்கிறது, அதனால் பயப்பட எதும் தேவை இல்லை. இவ்வாறு அந்த ட்விட்டரில் பதிவு போடப்பட்டுள்ளது.

நடுராத்திரியில் பேய்
எனவே இனியும் நடுராத்திரியில் பேய்தான் அழுத்தியது என எண்ணி, மூடநம்பிக்கையில் மூழ்க வேண்டாம். பேய் இருக்கிறதா இல்லையா, நம்பலாமா, நம்ப கூடாதா என்பதெல்லாம் தனி சப்ஜெக்ட்.. ஆனால் மருத்துவ ரீதியிலான காரணத்தை கூட பேய், பிசாசின் செயல் என தவறாக கருதுவதை தவிர்க்க வேண்டும். அப்படியும் தெளிவு பெறவில்லை என்றால் நம் குடும்ப மருத்துவரை அணுகி இது போன்று "பேய் அழுத்துவது" குறித்து கேட்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications