கண்ட்ரோல் எடுக்கும் உதயநிதி ஸ்டாலின்.. துணை முதல்வர் பதவியின் "பவர்கள்" என்னென்ன தெரியுமா? முக்கியம்
சென்னை: விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் துணை முதல்வர் பதவிக்கு என்ன மாதிரியான அதிகாரங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியாக இருக்கும் பதவி கிடையாது. இது அரசு ரீதியான நியமன பொறுப்பு. துணை முதல்வர் மாநில அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய பதவி ஆகும். மாநில அமைச்சர்கள் குழுவின் சீனியாரிட்டியில் இரண்டாவது மிக உயர்ந்த பதவி ஆகும் இது.

துணை முதலமைச்சர் பொதுவாக உள்துறை அமைச்சர் போன்ற கேபினட் இலாகாவையும் வைத்திருப்பர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்துறையை வைத்துள்ள நிலையில், அவர் இல்லாத நேரங்களில்.. அவர் வெளிநாடு செல்லும் நேரங்களில் உதயநிதி ஸ்டாலின் அவரின் துறைகளை கவனிப்பார். பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது.. முதல்வருக்கு துணையான பதவிதான்.
ஒரு முதல்வர் இல்லாத நேரங்களில் அவரின் முடிவுகளை எடுக்கும் பவர் துணை முதல்வருக்கு உண்டு. அமைச்சரவை கூட்டங்களை நடத்த முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் உத்தரவின் பெயரில் துணை முதல்வர் கூட்டங்களை நடத்த முடியும். ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் அனுமதியுடன் உள்துறை தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும்.
துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. நேற்று ஆளுநர் மாளிகை இதை பற்றி செய்தி குறிப்பாக வெளியிட்ட நிலையில், இன்று அரசு அறிவிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார்.
தற்போது, 14 மாநிலங்களில் (28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில்) மட்டுமே துணை முதல்வர்கள் உள்ளனர். இதில், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு துணை முதல்வர்கள் உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட துணை முதல்வர் பதவியில் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்வாகி உள்ளார்.
பதவி அளிக்கப்படும் முன் நடந்தது என்ன?: முன்பு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதில்.. ஸ்டாலினுக்கும் பெரிய ஆர்வம் இல்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரிய விருப்பம் இல்லாமல் இருந்தது.
உதயநிதியே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் பதவிக்கே ஏகப்பட்ட போன்கால்கள், அதிகாரிகள் மீட்டிங் என நேரம் விரையமாவதால், துணை முதல்வரானால் 90 சதவீத முதல்வர் பணிகளை செய்ய வேண்டிய நிலை வருவதை அவரே ரசிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் ஆட்சி நிர்வாகத்திற்கும், எதிர்காலத்திற்கும் அவசியம் என்பதால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்துள்ளார். உதயநிதி ஸ்டாலினும் இதை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications