இப்போ வேலை மாறாதீங்க.. முதலீடு பண்ணாலும் சிக்கல்.. உலகப்போர் வருது.. நெருங்கும் 10 ஆபத்துகள்!
சென்னை: ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்.. உலகின் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலை ஒரே இரவில்.. நடுங்க வைத்துள்ளது ஈரான் தாக்குதல்.
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஒரு பக்கம் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் உச்சம் எடுக்கப்பட உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிடுவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளன. முக்கியமாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இதில் நேரடியாக அல்லது மறைமுகமாக தலையிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.
இந்த போர் தொடங்கும் பட்சத்தில் ; உலக அளவில் 10 முக்கியமான சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
1. உலக அளவில் மார்க்கெட் சரியும். பல நாடுகளில் மார்க்கெட் ரத்த களரியாக மாறும். இதனால் மார்க்கெட் அப்படியே போரில் கலந்து கொள்ளாதநாடுகளிலும் மோசமான விளைவுகளை சந்திக்கும்.
2. இதன் விளைவாக விலைவாசி உயரும். பல நாடுகளில் விலைவாசி கண்டிப்பாக உச்சத்தை தொடும்.
3. வேலை வாய்ப்பு மோசமான நிலையை அடையும். ஏனென்றால் மார்க்கெட் மோசமாக சரிந்தால்.. 50 சதவிகிதத்திற்கும் கீழ் சென்றால் கண்டிப்பாக அது மந்தநிலையை உருவாக்கும். அப்படி நடந்தால் கண்டிப்பாக வேலைவாய்ப்பு சரியும்.
4. புதிய தீவிரவாத அமைப்புகள், புதிய உலக ஆர்டர் உருவாகும்.
5. எண்ணெய் விலை உயரும்.
6. இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும்.
7. பயணம் செய்வதற்கான முறைகள் மாறும். விலை உயரும்.
8. உலகப்போர் வந்தால் தற்போது உலகில் கோலோச்சும் பல நாடுகள் மண்ணை கவ்வும். அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும்.
9. நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மாறும். சில நாடுகளில் அரசுகள் மாறும் அபாயமும் உள்ளன.
10. சில நாடுகளில் புதிய எல்லை பிரச்சனைகள் உருவாக்கலாம், அதிபர்கள், பிரதமர்கள் பதவிகளை இழக்கலாம். இப்படி உலகப்போர் வரும் பட்சத்தில் பல அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
இந்த போர் நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு போர்களும் (இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்) நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும் - இந்தப் போர்கள் புதிய உலக ஆர்டரை உருவாக்கும் போராக மாற போகிறது. அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு போர்களும் போரில் ஈடுபட்டு உள்ள நாடுகளின் நட்பு நாடுகளுக்கும் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications