செதில் செதிலாக சிதற போகுது.. தமிழக அரசியலையே புரட்டி போட போகும் சம்பவம்.. ஸ்டாலின் கையில் அச்சாணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பின்பாக சில முக்கியமான அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை : ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது.

cabinet Udayanidhi Stalin

இந்த நிலையில் தேர்தல் முடிந்ததும்.. அதாவது 2 வாரங்கள் கழித்து முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். ,முதல்வர் ஸ்டாலின் இந்த முறை வெளிநாட்டில் 5-10 நாட்கள் இருப்பார் என்று கூறப்படுகிறது. அரசு தகவலின் படி முழுக்க முழுக்க முதலீட்டை ஈர்க்கும் விதமாகவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்.

அதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் பல மாற்றங்களை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்வார். தமிழ்நாடு அரசியலையே உலுக்க போகும் சில முக்கியமான மாற்றங்களை முதல்வர் ஸ்டாலின் இன்னும் 2 வாரங்களில் வெளிநாடு செல்லும் நிலையில், மேற்கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.

முக்கிய மாற்றம் 1: இரண்டு முக்கியமான அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளனர். சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். முக்கியமான சிலர் மாற்றம் உறுதியாகிவிட்டது. துறைகள் மாற்றமும் உறுதியாகிவிட்டது.

இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி டார்கெட் செய்கிறது. அப்படித்தான் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தனர். தற்போது ஏவ வேலுவை டார்கெட் செய்கின்றனர். இடையில் பொன்முடியை டார்கெட் செய்தனர். இப்படி சீனியர்களாக இருக்கும் 10 பேரைத்தான் டார்கெட் செய்து வருகின்றனர்.

சீனியர்களாக இருக்கும் நபர்கள்தான் டெல்லியின் பொறியில் சிக்கி உள்ளனர். இதில் சிலர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

மாற்றம் 2: அடுத்த மிகப்பெரிய மாற்றம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்தான் இனி ஆட்சி அதிகாரத்தில் முழு கவனம் செலுத்த போகிறார். அதேபோல் அமைச்சரவையிலும் பெரிய மாற்றம் வரப்போவதாக செய்திகள் வருகின்றன. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்வர் பொறுப்பு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''நான் எப்படி அதைச் சொல்ல முடியும் ? முதல்வர்தான் முடிவு எடுப்பார் '' என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இதே போன்ற கேள்வி இதற்கு முன்பும் பல முறை அவரிடம் கேட்கப் பட்டிருக்கிறது.

அப்போதெல்லாம், எனக்கே தெரியாத விசயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. இதையெல்லாம் உங்களுக்கு யார் சொல்கிறார்கள்.. எனக்கு அப்படி எதுவும் தகவல் வரவில்லையே.. உங்களுக்கு யார் இது போன்ற தகவல்கள் வருகின்றன.. எனக்கு அப்படி தெரியவில்லையே ? '' என்கிற ரீதியில் மறுத்தே வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

துணை முதல்வர் : ஆனால், இந்த முறை அப்படி எதுவும் மறுக்காமல், அதை எல்லாம் முதல்வர் முடிவெடுப்பார் என்று சொல்லி உள்ளார். அதாவது துணை முதல்வர் பற்றி முதல்வர் முடிவு எடுக்கட்டும் என்று உதயநிதி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லியிருப்பதன் மூலம், துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். அதனை எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இளைஞரணி மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

முக்கியமாக பிறந்தநாள் விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் கொடுத்த முக்கியத்துவம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கடந்த பிறந்த நாளை விட இந்த பிறந்த நாளில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின்பும் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் பதவி திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மாற்றம் 3 - ஐஏஎஸ்: அதேபோல் ஒரே பிரிவில் நீண்ட நாட்களாக இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றும் முடிவையும் ஸ்டாலின் எடுத்துள்ளாராம். பலர் அதிமுகவிடம் தகவல் சொல்லும் கருப்பு ஆடுகளாக இருப்பதாக முதல்வருக்கு புகார் சென்றுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம்.

அடுத்த 3 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் இதனால் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+