அசத்தும் மஹிந்திரா.. வருகிறது புத்தம் புதிய கார்.. இந்திய சாலைகளை ஆக்கிரமிக்க போகும் கிங்?
சென்னை: மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ கிளாசிக் எஸ் வகை சீரியசில் புதிய கார் ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளது. இதற்கான புக்கிங் தீவிரமாக நடந்து வருகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இந்திய சாலைகளில் பறக்கும் முக்கியமான கார்களில் ஒன்றாகும். அதிலும் அரசியல் தலைவர்கள், பிஸ்னஸ்மேன்கள் அதிகம் பயன்படுத்தும் கார் ஆகும். இடையில் ஸ்கார்பியோ கார்கள் கொஞ்சம் மார்க்கெட்டை இழந்த நிலையில் தற்போது மீண்டும் மார்க்கெட்டை மீட்க மஹிந்திரா கார் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது.
இந்த நிலையில் மகிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில் கிளாசிக் எஸ் 5 காரின் புதிய வேரியண்ட் வெளியாக உள்ளது. Classic S5 என்று பெயரில் இந்த கார் வெளியாக உள்ளது.
Classic S5 2023 சீரியஸ் ஆகும் இது. இந்த கார் கிளாசிக் எஸ் மற்றும் கிளாசிக் எஸ் 11 இடையிலான கார் ஆகும். இரண்டிற்கும் இடையிலான மீடியம் ஸ்பேசிகேஷன் கொண்ட கார் ஆகும் இது.

அதிக ஸ்பெசிபிக் கொண்ட Classic S11 கார் பெரிய அளவில் மக்கள் இடையே வரவேற்பு கொண்டிருக்கவில்லை. Scorpio N அளவிற்கு இதன் விலை இருப்பதால் Classic S11 காரை யாரும் வாங்க விரும்பவில்லை. பழைய மாடல் எஸ் வகையையும் விற்க முடியாது. இதனால் இடையில் நல்ல ஸ்பேஷிகேஷன் கொண்ட எஸ் 5 காரை வெளியிட மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
ஸ்பேஷிகேஷன்:ஸ்கார்பியோ கிளாசிக் S5 மூன்று வகையான இருக்கை அமைப்புகளைப் பெற்றது ஆகும். அதில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
மற்ற ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் போல அதே 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் கொண்ட கார் ஆகும்
14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இது விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.
இது 130 BHP மற்றும் 300 Nm கொண்டது ஆகும்.
6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது இது.
ஸ்கார்பியோ கிளாசிக் S5 மூன்று வகையான இருக்கை அமைப்புகளுடன் வழங்கப்படும் - ஒன்று 7-சீட்டர் + பெஞ்ச், 7-சீட்டர் + கேப்டனின் சேர் கடைசியாக 9-சீட்டர் பெஞ்ச் கொடுத்து. இதில் ஒரு வகையை தேர்வு செய்யலாம். மற்ற வேரியண்ட் ஸ்கார்பியோவில் இதில் இரண்டு வகைகள் மட்டுமே உள்ளன. ஆனால் எஸ்5 ல் மூன்று வகையும் உள்ளது. இதில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.
கிளாசிக் S5 கார் அதே Gen 2 mHawk, 2.2 லிட்டர் டர்போ-டீசல் எஞ்சின் 132hp மற்றும் 300Nm டார்க்கை கொண்ட கார் ஆகும். இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் . பின்புற சக்கரங்களுக்கு இது பவரை அனுப்பும் இன்ஜின் கொண்டது அனுப்புகிறது. ஸ்கார்பியோ கிளாசிக் 5 காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை. முந்தைய ஜென் மாடலில் இருந்த 4x4 வீலிங் இதில் இல்லை.
தற்போதுள்ள மாடல்கள் புக்கிங் தீவிரமாக நடப்பதால் இதை புக்கிங் செய்து வாங்க சராசரியாக 5-6 மாதங்கள் தேவைப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications