சிறப்பே இதுதான்.. ட்விட்டரை ஓவர்டேக் செய்த ‛த்ரெட்ஸ்’.. எந்தெந்த விஷயங்களில் தெரியுமா? இதோ லிஸ்ட்
சென்னை: ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம்‛த்ரெட்ஸ்' செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது. முதல் 7 மணிநேரத்தில் 10 மில்லியன் பயனர்களை இந்த செயலி கவர்ந்துள்ள நிலையில் ட்விட்டரை ஒப்பிடும்போது த்ரெட்ஸில் அதிக எழுத்துகளை பயன்படுத்தி நீண்ட பதிவை செய்ய முடியும் என்பதும், த்ரெட்ஸில் பதிவிட்ட போஸ்ட்டை டெலிட் செய்யலாமா? இல்லையா? என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளில் ட்விட்டர் செயலி பிரபலமாக உள்ளது. இந்த செயலியை சிலர் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தி வரும் அதேவேளையும் பலரும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். இதையடுத்து அவர் பல்வேறு மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறார். குறிப்பாக ட்விட்டர் வருமானத்தை பெருக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார்.
அதன்படி ட்விட்டரில் புளுடிக் பயன்பாட்டுக்கு மாதம் ரூ.900 கட்டணம் செலுத்தப்பட வேண்டி உள்ளது. மேலும் ட்விட்டரில் வெரிபைட் பயனர்கள், வெரிபைட் இல்லாத பயனர்கள் தினமும் பார்க்க கூடிய பதிவுகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கிடையே தான் ட்விட்டருக்கு போட்டியாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா புதிய செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது.
‛த்ரெட்ஸ்' (Threads) எனும் பெயரில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது த்ரெட்ஸ் செயலியையும் கொண்டு வந்துள்ளது. இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட முதல் 7 மணிநேரத்தில் 10 மில்லியன் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த செயலி தான் எதிர்காலத்தில் ட்விட்டருக்கு சரியான போட்டியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ‛த்ரெட்ஸ்' செயலி குறித்து பலருக்கும் சில சந்தேகங்கள் உள்ளன. அதாவது ‛த்ரெட்ஸ்' செயலியில் பதிவிடும் போஸ்ட்களை டெலிட் செய்ய முடியும். நீண்ட பதிவுகளுக்கு அதிகபட்சமாக எத்தனை எழுத்துகள் வரை பயன்படுத்த முடியும். ஒரே நபர் 2 அக்கவுண்ட்டுகளை பயன்படுத்த இயலுமா? என பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். இந்த கேள்விகளுக்கான விடைகள் வருமாறு:
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள த்ரெட்ஸ் செயலயை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்கள் அப் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அதன்பிறகு இன்ஸ்டாகிராம் செயலி வழியாக ‛த்ரெட்ஸ்' செயலியை பயன்டுத்த வேண்டும்.
ட்விட்டரில் வெரிபைட் இல்லாத பயனர்கள் ஒரு போஸ்ட்டில் 250 எழுத்துகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ‛த்ரெட்ஸ்' செயலியில் ட்விட்டரை விட நீண்ட பதிவு செய்யலாம். தற்போது ‛த்ரெட்ஸ்' செயலியில் ப்ளூடிக் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் 500 எழுத்துகளில் பதிவுகள் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ட்விட்டரில் வெரிபைட் பயனாளர்கள் 25 ஆயிரம் எழுத்துகளில் நீண்ட போஸ்ட் செய்ய முடியும். ஆனால் இத்தகை நீண்ட போஸ்ட் தொடர்பாக ‛த்ரெட்ஸ்' இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் ட்விட்டரில் வெரிபைட் இல்லாத பயனாளர்கள் 2.20 நிமி வீடியோவை மட்டுமே பதிவிட முடியும். ஆனால் த்ரெட்ஸில் அனைவரும் GIF வகை போட்டோக்கள், 5 நிமிட வீடியோவை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் ‛த்ரெட்ஸ்' செயலியில் தவறாக ஏதேனும் ஒரு பதிவு செய்துவிட்டால் அதனை எளிதாக நீக்கம் செய்யலாம். மேலும் ஒரு நாளைக்கு பயனாளர்கள் எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் ‛த்ரெட்ஸ்' செயலியில் போஸ்ட் செய்யலாம். இதற்கு வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
மேலும் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகளை 2 எண்களில் இருந்து நாம் பயன்படுத்தி கொள்ள முடியும். ‛த்ரெட்ஸ்' செயலிலும் மெட்டா நிறுவனத்தில் வந்திருந்தாலும் தற்போதைய வகையல் ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு ஐடியை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications