விஜய் "அந்த" நடிகருடன்தான் அரசியலுக்கு வருவாராம்.. பிரபல ஜோதிடர் பரபரப்பு.! அப்போ முதல்வர் வேட்பாளர்?
சென்னை: நடிகர் விஜய் அந்த ஒரு நடிகர் இல்லாவிட்டால் அரசியலில் ஜெயிக்க முடியாது என பிரபல ஜோதிடர் ஒருவர் கூறிய தகவல் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில சம்பவங்களில் அவர் 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய திட்டங்களை செய்து வருகிறார். காமராஜர் பிறந்தநாளின் போது கூட 234 தொகுதிகளிலும் இரவு நேர பயிலகத்தை தொடங்கி வைத்தார்.

லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படம்தான் கடைசி படம் என்றும் அவர் அரசியலில் இணைய போவதால் சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியிருந்ததாக தெரிகிறது.
விஜய் அரசியலுக்கு வருவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர் சினிமாவை விட்டு விலகுவதை எண்ணி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். விஜய் அரசியலுக்கு வருவேன் என இதுவரை அறிவிக்கவில்லை. ஆனாலும் பலர் அவர் அரசியலுக்கு வருவார் என்றே கூறி வருகிறார்கள்.
இதுகுறித்து விஜய்யின் நெருங்கிய வட்டாரங்களை கேட்ட போது அவர்கள் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றே கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் கூறியிருப்பதாவது: விஜய் அரசியலுக்கு வருவார். அதே நேரம் சுக்கிரன் தோஷம் முடியும் வரை சினிமாவில்தான் நடிப்பார்.
சினிமாவுக்கு முழுக்கு போட மாட்டார்.அது மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து திட்டங்களையும் தீவிரமாக செய்வார். ஆனாலும் சினிமாவிலிருந்து விலக மாட்டார். விஜயகாந்திற்கு விருச்சிக லக்னம் இருப்பதால் சந்திர மங்கள யோகம் இல்லை.
விஜய்க்கு சந்திரன்- செவ்வாய் சேர்ந்திருக்கும். எனவே விஜய் அவரே சொந்தமாக கட்சி ஆரம்பித்து தனியாக நின்று ஜெயிக்க முடியாது. அதையும் மீறி அவர் தேர்தலில் போட்டியிட்டால் யாராவது அவருக்கு எதிராக நின்று தோற்கடிப்பார்கள். ஆகவே விஜய்- விஜயகாந்துடன் இணைந்துதான் அரசியலில் செயல்படுவார் என ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் வரும் 2026 இல் முதல்வர் என அவருடைய கட்சி நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். விஜய்யை 2026 இல் கோட்டையில் கொடியேற்றி வைக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். அப்படியிருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜயகாந்த் கட்சி ஆரம்பத்தில் ஓரீரு தொகுதிகளில் வெற்றி பெற்று பின்னர் அதிமுக கூட்டணியில் 29 தொகுதிகளில் வென்றார். அதன்பின்னர் கூட்டணியை மாற்றி மாற்றி வைத்ததால் தேமுதிகவின் வாக்கு சதவீதம் சரிந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் அக்கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் விஜய்யுடன் கூட்டணி வைத்து கணிசமாக வெல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயகாந்தை போல் விஜய்யையும் அரசியலுக்கு வருவார் என கூறப்படும் நிலையில் இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி











Click it and Unblock the Notifications