என்னாது நடிகர் ஆர்யாவுக்கு தபு மாமியாரா? ஹிருத்திக் ரோஷன் முதல் கரீனா கபூர் வரை சொந்தக்காரர்களாமே
சென்னை: நடிகர் ஆர்யா இருக்காரே அவருக்கு நடிகை தபு மாமியார் முறை வருகிறதாமே. உங்களுக்கு தெரியுமா? சினிமாவில் இல்லைங்க, நிஜத்தில்தான் சொல்கிறோம்!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "லால் சலாம்" படத்தில் ஒரு டயலாக் வரும்... "எல்லோரும் தனி நாடுன்னு போனப்போ இது தான் என் நாடுன்னு இருந்தவங்க பல பேரு.." அழகான உண்மை...

நடிகர் ஆர்யா 17 வயது வித்தியாசமுள்ள நடிகை சயீஷாவை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவர் யார் யாருக்கு என்ன உறவு முறை வேண்டும். சயீஷாவின் அப்பா சுமீத் சாஹல். அம்மா ஷஹீன் பானு. சுமீத் ஒரு நடிகர். 1990ல் சயீஷாவின் அம்மாவை திருமணம் செய்து 2003ல் விவாகரத்து வாங்கி விட்டார்.
அம்மா ஷஹீன் பானு யாருன்னா இந்தி நடிகை சாய்ரா பானுவின் சகோதரர் சுல்தான் அகமதுவின் மகள். ஷஹீனுக்கு சொந்த அத்தை சாய்ரா பானு. சாய்ராவின் கணவர் தான் 'முதல் கான்' திலீப் குமார்.
திலீப்குமாரின் சகோதரர் நஸீர் கான். நஸீர்கானின் இரண்டாவது மனைவி பேகம் பரா..பேகம்பராவின் சகோதரர் மகள் தான் நடிகை ருக்ஷானா சுல்தானா.
ருக்ஷானாவின் மகள் தான் அம்ரிதாசிங். அம்ரிதா சிங் நடிகர் சைஃப் அலிகானின் முதல் மனைவி. மாமியார் நடிகை ஷர்மிளா டாகூர். அமிர்தா சிங் மாமனார் மன்சூர் அலிகான் பட்டோடி. சைஃபோட இரண்டாவது மனைவி கரீனா கபூர். அது பெரிய குடும்பம்.. இப்போ சயீஷாவின் அப்பா கிட்ட போவோம். அப்பா சுமீத் நடிகர். சுமீத் சயீஷா அம்மாவை டைவர்ஸ் செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்தார்.
அது யாருன்னா ஃபர்ரா..ஃபர்ரா ஆர்ராவோட மாமியார் முறை... இவங்க நடிகை தபுவோட அக்கா. அப்போ ஆர்யாவோட மாமியார் தபு....
அத்தை ஷபானா ஆஸ்மி. மாமா ஜாவேத் அக்தர். அக்தர் முதல் மனைவி ஹனி இரானி. ஹனி இரானி மகன் தான் நடிகர் ஃபர்ஹான் அக்தர். ஜாவேத் அக்தர் முதல் மனைவி ஹனி இரானி அக்கா தான் மேனகா. மேனகாவின் மகள் தான் ஷாருக்கான் படம் 'ஓம் சாந்தி ஓம்' டைரக்டர் ஃபரா கான்..
சயீஷாவோட சின்னம்மா ஃபர்ரா, சயீஷா அப்பாவை திருமணம் செய்யும்முன் வேறொருத்தர் மனைவியாக இருந்தாங்க. 'மாவீரன்' படத்தில் ரஜினிக்கு அப்பாவா நடித்த தாராசிங் மகன் விந்தூ தாரா சிங். தாராசிங்கின் தம்பி ரந்தவா. இவர் மனைவி யாருன்னா நடிகை மும்தாஜ் சகோதரி. தமிழ் மும்தாஜ் இல்லை... ஹிந்தி மும்தாஜ்.
ராஜேஷ் கன்னாவின் ஃபேவரிட் நடிகை மும்தாஜ் தன் மகளை குர்பானி 'ஃபெரோஸ் கானுக்கு திருமணம் செய்து வைத்தார். ஃபெரோஸ் கான் குடும்பத்துக்கு போனா அது அவர் தம்பி சஞ்சய் கான் மூலமா ஹிருத்திக் ரோஷன் ஃபேமிலிக்கு போகும்.
டைவர்ஸ் எல்லாம் செல்லாதுன்னு அறிவிச்சா நம்ம ஆர்யா திலீப்குமார், ஃபெரோஸ்கான், சாய்ரா பானு, தாராசிங், சைஃப் அலிகான், டைரக்டர் ஃபரா கான், ஹிருத்திக் ரோஷன், கரீனா கபூர் வரைக்கும் சொந்தக்காரராகி விடுவார். இவ்வாறு செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications