இனி "ஆடை குறைப்புக்கு" பெண்கள் அவசியம் இல்லை.. மொத்தமாக மாறும் உலகம்! ஹிந்தி சேனல் பார்த்தீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் அதிவேகமாக செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) நோக்கி போய் கொண்டுள்ளது. சாட்ஜிபிடி (chatgpt) என்பது பெரும் பனிமலையின் ஒரு முனை மட்டுமே. உள்ளே போகப்போக அது ஒரு மாய உலகமாக விரிவடைகிறது.

ஆபீஸ் ரெஸ்யூம் ரெடி செய்வதிலிருந்து, வீட்டு பாடம் தயார் செய்வது வரை ஆக்கப்பூர்வ பல பணிகளை இதை வைத்து செய்தாலும், எல்லா தொழில்நுட்ப விஷயங்களை போலவே இதை வைத்தும் விளையாட்டு காட்டுகிறார்கள் சில வம்பர்கள்.

எப்படி என்கிறீர்களா.. AI தொழில்நுட்பம் மூலமாக அரைகுறை ஆடைகளுடனான மாடல்களை உருவாக்க ஆரம்பித்து அதற்காக தனி சோஷியல் மீடியா அக்கவுண்டுகளையும் ஆரம்பித்துள்ளனர். பார்க்க அசல் பெண் மாதிரியே தெரியும் இதை நம்பி நமது ஜொள்ளர்கள் யாராவது ஃபிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து உள்ளே போனால், தலையில் மிளகாய் அரைப்பது நிச்சயம்.

மாய பெண்கள்

மாய பெண்கள்

உருவம் மட்டுமல்ல, ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து வாய்சையும் உருவாக்க முடியும். ஒரு அழகான பெண் குரலில் அந்த உருவம் பேசுவதை பார்க்கும்போது யாருக்கும் ஈஸியாக சந்தேகம் வராது. எங்க வீட்டுக்காருக்கு அவசரமா 50 ஆயிரம் பணம் தேவை என்று, கெஞ்சும் குரலில் உங்களிடம் கேட்பது ஏஐ என தெரியாமல், நீங்கள் நண்பர்களிடம் பணத்தை புரட்டி கொடுத்து ஏமாறவும் வாய்ப்புள்ளது என்பது எச்சரிக்கை தகவல்.

 ஆண்களின் உலகம்

ஆண்களின் உலகம்

அதேநேரம், பிகினி இன்ஸ்டா போஸ்டுக்குதான் அதிக லைக்ஸ் வருகிறது என்று நினைத்து, சமூக வலைத்தளங்களுக்காக ஆடை குறைப்பு செய்யும் பெண்களுக்கு இது பெரும் "போட்டியாளராக" உருவெடுக்கப்போகிறது. பிகினியையும், அரைகுறை ஆடையையும் செயற்கை பெண்ணுக்கு உடுக்க வைத்து பல இன்ஸ்டா பேஜ்களையும், ஸ்னாப்சாட்களையும் இனி ஆண்களே நடத்திவிட முடியும். ஜொள்ளர்களுக்கு தேவை காட்சிதானே தவிர உயிர்ப்பு இல்லையே. இப்படித்தான் ஏற்கனவே பல நாடுகளில் ஜொள்ளர்களை குறி வைத்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார்களாம்.

 மாடலிங் பெண்கள்

மாடலிங் பெண்கள்

நல்ல விஷயம் என்னவென்றால், ஆடை ஆபரண நிறுவனங்கள், மாடலிங் என்ற பெயரில் உள்ளாடைகளை பெண்களுக்கு உடுத்திவிட்டு அதை தங்கள் வெப்சைட்டில் போட வேண்டிய அவசியம் இனி இருக்காது. அந்தந்த பிராந்தியத்திற்கு தக்க தோல் கலரில் பெண் உருவங்களை உருவாக்கி அவற்றுக்கு ஆடை அணிவித்து காட்சிப்படுத்திவிட முடியும். Levi's அறிமுகம் செய்துள்ள சமீபத்திய மாடல்கள் அப்படியானவை. உற்று பார்த்தால் கண்டுபிடிக்கலாமே, தவிர, சட்டென்று பார்த்தால் தெரியாது.

செய்தி வாசிப்பு

செய்தி வாசிப்பு

சில ஹிந்தி செய்தி சேனல்கள் இப்போதே ஏஐ மூலம் உருவாக்கிய பெண்களை செய்திவாசிப்பாளர்களாக்கியுள்ளன. உதவி ஆசிரியர்கள் எழுதி கொடுப்பதை இந்த மாய பெண்கள் வாசிக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு நிஜமாகவே பெண் வாசிப்பதை போல தெரிகிறது. ஒரு சில உச்சரிப்பு சிக்கல்களை தவிர்த்து பார்த்தால் செய்தி வாசிப்பாளர்கள் பலரின் வேலைக்கு இந்த தொழில்நுட்பம் விரைவில் உலை வைக்கப்போவது நிச்சயம் என்கிறார்கள்.

 பெண்களின் பாதுகாப்பு?

பெண்களின் பாதுகாப்பு?

"அரை குறை ஆடைகளில் மாடலிங் செய்ய வைக்க முடியும், பிகினியில் குளியல் போட வைக்க முடியும், "வெட் சாட்" செய்ய வைக்க முடியும்.. இன்னும் எத்தனையோ ஆழ்மனது அழுக்குகளின் வடிகாலாக ஏஐ தொழில்நுட்பத்தை மாற்ற முடியும்.." என்கிறார் சென்னையை சேர்ந்த இந்த துறை வல்லுநர் ஒருவர். பல ஏஐ தொழில்நுட்ப பட உருவாக்கிகள், இப்போது பிகினி என்பது போன்ற வார்த்தைகளை தடை செய்யப்பட்ட பட்டியலில் வைத்துள்ளன. எனவே நமது பெண்கள் பாதுகாப்பாக உணருகிறார்கள். போட்டி அதிகரிப்பு, காசு கொடுத்து லாகின் செய்யும்போது கூடுதல் வசதிகளை திறந்துவிடுவது போன்றவற்றில் அந்த நிறுவனங்கள் இறங்கினால் இங்கு எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இருக்காது. ஆம்.. ஆடையை அகற்றி பெண்களை பிகினியில் காட்டும் ஏஐ தொழில்நுட்பங்களுக்கு நமது அரசு தடை விதிக்காவிட்டால், அல்லது உலக சமூகம் ஒன்றிணையாவிட்டால் இங்கு எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகும். ஆண்களின் அழுக்குகளுக்கான, உலகமாக மட்டுமே மாறிப்போகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+