துபாய் கார் ரேஸிங்கில் அணிந்திருந்த உடையை காட்டி பெருமிதம் கொண்ட அஜித்! என்ன சொல்றாரு ஏ.கே.!
சென்னை: துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் தனது உடையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை சுட்டிக் காட்டி பெருமைப்பட்டுக் கொண்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.
2003, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த சர்வதேச கார் ரேஸ்களில் அஜித் கலந்து கொண்டார். அது போல் 2010 ஆம் ஆண்டு நடந்த எஃப்ஐஏ பார்முலா 2 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்ததால் அவரால் கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களை முடித்துவிட்ட அஜித், துபாயில் நடந்த 24 எச் எனப்படும் 24 மணி நேர கார் ரேஸிங்கில் கலந்து கொண்டார்.
இதற்காக பல கோடி மதிப்பிலான 24 எச் வகை காரை அஜித் வாங்கினார். அவர் ரேஸிங்கில் இயக்கிய காரின் எண் 901. நேற்று முன் தினம் 11 ஆம் தேதி மதியம் 1 மணிக்குத் தொடங்கிய இந்த ரேஸ் நேற்று மதியம் 12 ஆம் தேதி மதியம் 1 மணி முடிந்தது. இந்த ரேஸிங்கில் 3 ரேஸர்கள் அஜித்தின் காரில் இருந்தனர்.
இவர்களில் கார் ரேஸின் கேப்டன் அஜித்குமார். எனவே அவர்தான் 14 முதல் 18 மணி நேரம் வரை காரை ஓட்டினார். அந்த வகையில் நடந்த இந்த போட்டியில் அஜித்குமாரின் அணி 3ஆவது இடத்தை பிடித்து பெரும் சாதனை படைத்தது.
அவருக்கு பெரும்பாலானோர் வாழ்த்துகளை சொல்லி வருகிறார்கள். மேலும் தேசியக் கொடியை வீசியபடி துபாயில் அஜித்குமார் உற்சாகமாக வந்தது பெரும் பெருமையை கொடுத்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் அவர் அணிந்திருந்த கார் ரேஸிங்கிற்கான பிரத்யேக உடையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை பொறித்திருந்தார்.
அந்த லோகோவையும் காட்டியபடியே அவர் துபாய் ரேஸிங் பகுதியில் வலம் வந்தார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது: துபாய் கார் பந்தயத்தில் அஜித்குமார் 3ஆவது இடம் பிடித்ததற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே வேளையில் திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ காட்டியதற்கு அஜித் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அஜித் மேலும் பல சாதனைகளை செய்ய வாழ்த்துகிறேன் என உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: துபாய் கார் பந்தய போட்டியில் அஜித் 3-ஆவது இடம் பிடித்துள்ளதற்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications