என்னாது ரஜினி பட வில்லன் நடிகருக்கு, பேபி அஞ்சு 4-ஆவது மனைவியா?.. அதுவும் 31 வயசு வித்தியாசம்!
சென்னை: நடிகை அஞ்சு இந்த கன்னட நடிகருக்கு 4ஆவது மனைவியாம். அந்த நடிகருடன் திருமணம் செய்துக் கொள்ளாமலேயே வாழ்ந்து வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அஞ்சு. இவர் உதிரிப்பூக்கள், மீண்டும் கோகிலா போன்ற படங்களில் நடித்துள்ளார். பிறகு கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு ஹார்மோன் பிரச்சினை காரணமாக உடல் எடை கூடிவிட்டதால் சினிமா வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ் மட்டும் அல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

டைகர் பிரபாகர்
இவர் கன்னட நடிகர் டைகர் பிரபாகரனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து 1996ஆம் ஆண்டு விவாகரத்தையும் பெற்றுள்ளார். இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகன் உள்ளார். கன்னட நடிகரான டைகர் பிரபாகரன் சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவர் அனைவருக்கும் பரிட்சயம் ஆனது ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தின் மூலம்தான்.

மீனா
இந்த படத்தில் மீனாவின் அக்காள் கணவராக நடித்திருந்தார். இவர் பெரும்பாலும் வில்லன் நடிகராகவே நடித்திருந்தார். இவருக்கு அல்போன்சா மேரி, நடிகை ஜெயமாலா உள்பட 3 பேரை திருமணம் செய்து கொண்டார். தமிழில் வாய்ப்புகள் கிடைக்காத போது கன்னடத்தில் வாய்ப்பு தேட சென்ற நடிகை அஞ்சுவை காதலித்தார்.

நடிகை அஞ்சு
1996ஆம் ஆண்டு நடிகை அஞ்சுவை டைகர் பிரபாகர் காதலித்த போது அவருக்கு வயது 17, டைகருக்கு வயது 48. தனது 52 ஆவது வயதில் 2001 ம் ஆண்டு டைகர் மரணமடைந்தார். இந்த நிலையில் தனது வாழ்க்கை குறித்து குறித்து யூடியூப் சேனலுக்கு அஞ்சு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது தந்தை வயதில் இருந்தவரைதான் காதலித்தேன். என் வீட்டில் எல்லாரும் எதிர்த்தார்கள். ஆனாலும் நான் கேட்கவில்லை. நான் அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்தேன்.

3 திருமணங்கள்
சுமார் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்தேன். அப்போதுதான் அவருக்கு ஏற்கெனவே 3 திருமணங்கள் நடந்து அவரது பிள்ளைகள் என்னை விட மூத்தவர்கள் என்றும் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ந்தேன். எனினும் நானே தேடிக் கொண்ட வாழ்க்கை என்பதால் எல்லாவற்றையும் சமாளிக்க முயற்சித்தேன்.

கர்ப்பம்
நான் கர்ப்பமாக இருந்த போது அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனால் எனக்கு மன வருத்தம் ஏற்பட்டது. 17 வயதாக உள்ள தன்னை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை தேடுகிறாரே இவருடன் எப்படி வாழ்வது என யோசித்தேன். இதனால் அவரை நான் விவாகரத்து செய்துவிட்டேன் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications