Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில் பாமாயில் இப்படி கிளீன் பண்ணுங்க.. சமையல் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? டாக்டர்கள் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளில் வாங்கும் பாமாயிலை பலரும் பயன்படுத்துவதில்லை... இதற்கு காரணம், பாமாயில் என்றாலே உடலுக்கு கெடுதி என்ற பார்வை உள்ளது.. உண்மையிலேயே பாமாயில் உடலுக்கு தீங்கு தரக்கூடியதா? பாமாயிலில் சத்துக்கள் உள்ளதா? இதை முறைப்படி சுத்தப்படுத்தி, உபயோகப்படுத்தினால், பல நன்மைகள் கிடைக்கும் என்பது உண்மையா? மருத்துவர்கள் சொல்வது என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

ரேஷனில் பாமாயில் மலிவு விலையில் தரப்படுகிறது.. மலிவாக கிடைக்கிறது என்பதற்காக அதில் சத்துக்கள் இல்லை என்று சொல்ல முடியாது.. வைட்டமின் A, E , பீட்டா கரோட்டின் போன்றவை அதிகமாக இருப்பதுடன், இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அபரிமிதமாக உள்ளன..

Palm Oil Ration Shop

சத்துக்கள் - புற்றுநோய் செல்கள்

இந்த வைட்டமின் A, கண்கள் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரிசெய்து, பார்வைத்திறனை பெருக்குகிறது.. இதனால் ரெட்டினா குறைபாட்டையும் சரி செய்கிறது.. உருவாகக்கூடிய கெட்ட செல்களை ஒழிக்கிறது.. கேன்சர் செல்களையும் தடுக்க துணைபுரிகிறது.

வைட்டமின் E சத்தானது, சரும ஆரோக்கியத்தை சீராக்குவதுடன், ஹார்மோன் சமநிலையையும் ஏற்படுத்துகிறது..

எனினும், பாமாயிலை அனைவருமே பயன்படுத்த முடியாது.. இதில் கொழுப்பு சத்துக்கள் உள்ளதால், உடல் பருமன் உள்ளவர்கள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள், தலைசுற்றல், மயக்கம் போன்ற பாதிப்புடையவர்கள், பாமாயிலை தவிர்க்கலாம்..

பல வருட காலம் பயன்படுத்தாமல், திடீரென பாமாயிலை பயன்படுத்துபவர்களுக்கும், , பேதி, மயக்கம் ஏற்படலாம்.. அதேபோல, உடல் ஆரோக்கியமுள்ளவர்களாக ,இருந்தாலும்கூட, ரேஷன் பாமாயிலை நேரடியாக பயன்படுத்தக்கூடாது.. காரணம், உடலில் பித்தம் அதிகரித்துவிடும். பாமாயிலை சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும்.

ஈஸியான முறையில் சுத்திகரிப்பு

எளிய முறையில் எப்படி சுத்தப்படுத்துவது தெரியுமா? ஒரு வாணலில் பாமாயிலை ஊற்றி சூடு செய்ய வேண்டும். ஆனால், புகை வரும் அளவுக்கு காய்ச்சிவிடாமல், மிதமான தீயில் வைத்து, அதில் சிறிது புளியில் கல் உப்பையும் வைத்து, அது வெளியில் வந்துவிடாபடி திணித்து உருட்டிக் கொள்ள வேண்டும்..

இப்போது புளி உருண்டையையும், தோல் சீவப்பட்ட துண்டு இஞ்சியையும் போட்டு அப்படியே 10 நிமிடம் விட்டுவிட வேண்டும்.. இப்போது புளியின் நிறம் கருப்பாக மாறியிருக்கும். பாமாயிலில் நுரை பொங்கி அடங்கினாலே, அதிலுள்ள எண்ணெய்யின் பித்தத்தை புளி, இஞ்சி, உப்பு மூன்றுமே ஈர்த்துவிடும்.

பிறகு இவைகளை நீக்கிவிட்டு, வெறும் எண்ணெய்யை மெல்லிய துணியில் வடிகட்டி பயன்படுத்தலாம். எண்ணெய்யை புளி, இஞ்சி சேர்த்து காய்ச்சுவதால் பித்தம் நீங்குவதுடன், அதிலுள்ள சத்துக்களும் வீணாகாது.. உடலுக்கும் தீங்கு விளைவிக்காது..

ஆரோக்கியமான கொழுப்பு

சமீபத்தில், பாமாயில் குறித்து பிரபல குழந்தை நல மருத்துவரும், உணவு ஆலோசகருமான டாக்டர். அருண்குமார் விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.. அதில், "உலகளவில் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40% பாமாயில் பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் 92 சதவீதம் நிறை கொழுப்பு உள்ளது.

பாமாயிலில் 40 சதவீதம் நிறை கொழுப்பு உள்ளது. கடலை எண்ணெய்யில் நிறை கொழுப்பு 20% உள்ளது... பாமாயில், கடலை எண்ணெய் இரண்டிலுமே மோனோசாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் என்று அழைக்கப்படும் கொழுப்பு 40 சதவீதம் இருப்பதால், இதுவே ஆரோக்கியமான கொழுப்பு என்று கருதப்படுகிறது.

ஆனால் பாமாயிலில் நிறை கொழுப்பு அதிகம் உள்ளதால் அது ஆரோக்கியமற்றது என்று கருதப்படுகிறது. எனினும், பாமாயிலில் நிறை கொழுப்பு மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு இரண்டுமே சமமான அளவில் இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது என்று எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை.

இதயநோய் வருமா?

முக்கியமாக, கெட்ட கொழுப்பை இது அதிகரிப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன... ரேஷன் கடைகளில் கிடைக்கும் பாமாயில் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிக்காது, இதய நோய் ஏற்படும் ஆபத்தும் இல்லை.

அரசு மலிவான விலையில் தந்தாலே, அது தரமற்றதாக இருக்கும் என்ற பொதுக்கருத்து உள்ளதால், பாமாயிலும் அப்படி ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. ஆனால், பாமாயிலால் உடலுக்கு எந்த தீங்கும் கிடையாது.. மற்ற எண்ணெய்யை சுத்தரிக்கும்போதும் ஏற்படும் கெடுதல்கள், பாமாயிலுக்கும் உண்டு என்றாலும், உடலுக்கு அபாயம் கிடையாது.. எனினும், பாமாயிலை மிதமான அளவில் எடுத்து கொள்வது அவசியம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+