சென்னை மக்களே.. பைக்கில் ஏர்போர்ட் போக போறீங்களா.. இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ஆறு அடுக்குகளை கொண்ட நவீன 'மல்டி லெவல் கார் பார்க்கிங்'கில் நேற்று முதல் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் கடந்த ஓராண்டாக பெரிய அளவில் நவீனமயமாகி வருகிறது. அண்மையில் கூட புதிய முனையம் திறக்கப்பட்டது.. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நவீன மல்டி லெவல் கார் பார்க்கிங் திறக்கப்பட்டது

இந்நிலையில் வாகனங்கள் சென்னை விமான நிலைய வளாகத்துக்குள் நுழையும் இடத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டு கார்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு டோக்கன் கொடுக்கும் முறை அமலில் இருக்கிறது.
அந்த டோக்கனில் வாகனத்தின் எண், உள்ளே நுழையும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். வெளியில் செல்லும்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில் டோக்கனை பார்த்து, எவ்வளவு நேரம் நின்றதோ அதற்கு தகுந்தாற்போல் கட்டணங்களை வசூல் செய்யப்படுகிறது.
ஆனால் அதேநேரம் இருசக்கர வாகனங்கள் உள்ளே நுழையும்போது டோக்கன் வாங்க வேண்டியது இல்லை. பார்க்கிங்கில் நிறுத்தி கொள்ளலாம். வெளியே செல்லும்போது அப்பகுதியில் நிற்கும் பார்க்கிங் ஊழியர், இருசக்கர வாகனங்களிடம் கட்டணங்களை வசூலித்து கொள்வார்கள். காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பத்திரிகையாளர், அரசு துறையினர், விமான நிலைய ஊழியர்கள் போன்றவர்களுக்கு வாகன கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் பார்க்கிங் பகுதி பராமரிப்பு நிர்வாகத்தை தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதால் ஏப்ரல் 21ம் தேதி முதல் விமான நிலையத்துக்குள் நுழையும் இருசக்கர வாகனங்கள் அனைத்துக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இனி அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் டோல்கேட்டில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ள வழியில்தான் செல்ல வேண்டும். '

அங்கு பணியில் இருக்கும் டோல்கேட் ஊழியர், இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை 'ஸ்கேன்' செய்து டோக்கன் கொடுக்கிறார். விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வழியில் டோல்கேட் ஊழியர்கள் இருசக்கர வாகனங்கள் எவ்வளவு நேரம் உள்ளே நிறுத்தப்பட்டதோ அதற்கு தகுந்தாற்போல் பார்க்கிங் கட்டணம் வசூலித்து விட்டு அனுப்புகிறார்கள்.
இதில் விதிவிலக்கு யாருக்கும் இல்லை. காவல்துறை, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், அரசு துறையை சார்ந்தவர்கள் யாருக்கும் விதிவிலக்கு இல்லை. அனைவரும் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே நுழையும் போது கொடுக்கும் டோக்கனை தவற விட்டவர்களுக்கு வெளியேறும் போது ரூ.150 அபராதமாகவும் வசூலிக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல் ஆகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications