ஆடி மாசம்தான் இதுக்கே இப்படின்னா?.. ஆவணி பொறந்தா என்னா விலை விக்குமோ.. தகிக்கும் தங்கம் விலை!
சென்னை: சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 54,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மிகப் பெரிய முதலீடாக கருதப்படுகிறது. லாக்டவுன் நேரத்திலும் இதன் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. என்னதான் பெண்களுக்கு புன்னகை இருந்தாலும் பொன் நகை என்பது அவசியமானதாகிவிட்டது.
கவரிங் நகைகளே அட்டகாசமாக தங்க நகைகளுக்கு ஈடாக வந்துவிட்ட போதிலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் இன்னும் குறையவில்லை. மண்ணின் மீதும் பொன்னின் மீதும் போட்ட முதலீடு எப்போதும் வீண் போகாது என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கணவன் வீடு
அதனால்தான் பெண்கள் தாய் வீட்டிலோ அல்லது கணவன் வீட்டிலோ இருந்து பூர்வீக சொத்து விற்பனை செய்ததற்கான பணம் வந்தால் உடனே நகை மீதும் மனை மீதும் விற்பனை செய்ய முன்வருகிறார்கள். அது போல் பணம் என ஒன்று கிடைத்தாலே தங்கத்தின் மீது முதலீடு செய்யத்தான் யோசிக்கிறார்கள்.

அதிகரிப்பு
ஆனால் தங்கத்தின் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 22 கேரட் என்றால் ரூ 5,014 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது நேற்று விலையை விட ரூ 1 அதிகமாகும். அது போல் 8 கிராம் தங்கம், அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 40,112 ஆகும். ரூ. 8 விலை உயர்ந்துவிட்டது.

10 கிராம்
இதே 10 கிராம் தங்கமாக இருந்தால் ரூ 50,140 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 5,469 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ 43,752க்கு விற்பனையாகிறது. 10 கிராம் தங்கத்தின் விலையோ ரூ 54,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை
வரும் தீபாவளிப் பண்டிகையின் போது தங்கத்தின் விலை நிச்சயம் 75 ஆயிரத்துக்கு செல்லும் என வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். தீபாவளி நேரத்தில் புதுமாப்பிள்ளைக்கு மோதிரம் அல்லது பிரேஸ்லெட் போடும் வழக்கம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளார்கள்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications