புதுப்பொலிவுடன் தயாராகி வரும் கிண்டி ரயில் நிலையம்! முழு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
சென்னை: அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் சென்னை கிண்டி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன என்றும் தற்போது வரை 50 சதவீத பணிகள் நடந்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் 116 ரயில் நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 116 இல் சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மறுமேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இவற்றில் ஒன்றுதான் கிண்டி ரயில் நிலையம் . இங்கு பல்வேறு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கிண்டியில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், செல்லம்மாள் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளும் ஸ்பிக், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு மின்சார ரயிலில் வந்து செல்வோருக்கு கிண்டி ரயில் நிலையம் வரப்பிரசாதமாக இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் கிண்டி ரேஸ் கோர்ஸ், கிண்டி தேசிய பூங்கா, தொழில் பூங்கா, காந்தி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்வோருக்கு உதவியாக கிண்டி ரயில் நிலையம் உள்ளது. இங்கு தினசரி சராசரியாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த ரயில் நிலையம் ரூ 13.50 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதியாக புதிய டிக்கெட் பதிவு அலுவலகம் அமைக்கப்படுகிறது. ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு வசதியாக நடைமேடைகள் மேம்படுத்தப்படவுள்ளன. ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் உள்ள பழைய கூரைகளை அகற்றிவிட்டு புதியது அமைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், ஆகியோர் எளிதாக வந்து செல்லும் வகையில் 3 லிப்ட்கள் வைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. 1, 2, ஆவது நடைமேடைகளில் லிப்ட் வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது வரை 50 சதவீத பணிகள் நடந்து வருகின்றன. வரும் செப்டம்பரில் இந்த ரயில் நிலையம் தயாராகிவிடும் என தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications