கூகுள் மேப்பில் லைவ் லொகேஷன் எப்படி பார்ப்பது? கூகுள் மேப் லொகேஷன் ஹிஸ்டரியை அழிக்க முடியுமா? அட ஈஸி
சென்னை: இன்றைய நாட்களில், கூகுள் மேப்பின் தேவை தவிர்க்க இயலாதது.. லைவ் லொகேஷனை துல்லியமாக கண்டறிவது எப்படி தெரியுமா? லோகேஷனை எப்படி டெலிட் செய்வது தெரியுமா?
சாலையில் நடந்து சென்றாலும்சரி, கார் ஓட்டினாலும்சரி, பைக்கில் போனாலும் சரி, எந்த பொதுப்போக்குவரத்தில் நீங்கள் பயணித்தாலும், நாம் செல்லவேண்டிய இலக்குக்கான வழியை விரைவாக கண்டறிய உதவும் ஒருவகை செயலி இதுவாகும்.

கூகுள் மேப்: கூகுள் மேப்பில், நாமிருக்கும் லொகேஷன், ப்ளூ கலர் புள்ளியில் காட்டும்.. ஒருவேளை நம்முடைய இருப்பிடத்தை கூகுள் மேப்பால் சரியாக கணிக்க முடியாவிட்டால், அந்த புளூ கலர் புள்ளியை சுற்றிலும், வெளீர் நீலநிறத்தில் வட்டமாக இடம்பெற்றிருக்கும். இந்த வெளீர் நீல நிற வட்டத்திற்குள், நம்முடைய லொகேஷன் இருக்கலாம்.
இந்த கூகுள் மேப்பில் நீல நிற புள்ளி அல்லது கிரே நிறத்தில் இருந்தால், நம்முடைய இருப்பிடத்தை கூகுளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அர்த்தம்.. அதாவது பழைய லொகேஷனையே மேப் காட்டிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்..
சிக்னல் பிரச்சனை: ஒருவேளை நாம் பார்க்கிங் ஏரியாவில் இருக்கலாம் அல்லது நெட்வொர்க் இல்லாத இடத்தில் நாம் இருக்கலாம்.. இதுபோன்ற காரணங்களினால், நம்முடைய லோகேஷனை துல்லியமாக காட்ட முடியாது.
ஆண்ட்ராயிடு செல்போனில் லொகேஷன் அறிய வேண்டுமானால், முதலில் வைஃபை ஆன் செய்து கொள்ள வேண்டும். செல்போனில், Settings-கிற்குள் சென்று, Location என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், Mode என்று டைப் செய்து, High accuracy கிளிக் செய்ய வேண்டும். எப்போதுமே லொகேஷனை துல்லியமாக கண்டறிய வேண்டுமானால், "High Accuracy Mode" பயன்படுத்த வேண்டும்.
சேமிக்கப்பட்ட விவரங்கள்: சிலசமயங்களில், நம்முடைய சொந்த காரணங்களுக்காக, கூகுள் மேப்ஸ் பயண விவரங்களை சேமித்து வைத்திருக்க நேரிடும்.. இவைகளை எப்படி டெலிட் செய்வது தெரியுமா?
- ஸ்மார்ட் போனில், கூகுள் மேப் அப்ளிக்கேஷனை ஓபன் செய்து கொள்ள வேண்டும்
- வலப்புறத்தில் மேலுள்ள, கூகுள் அக்கவுண்ட் புரொஃபைல் பிக்சரை தொட வேண்டும்.
- பின்னர் "Your Timeline" என்ற ஆப்ஷனை ஓபன் செய்து, மேலே வலப்புறமாக காண்பிக்கும் 3 மெனு புள்ளிகளையும் அழுத்த வேண்டும்
- இதற்குள் Settings and Privacy என்பதை அழுத்தினால், Delete all Location history என்ற விவரங்கள் தெரியும். இதை நீங்கள் மொத்தமாக அழித்துவிடலாம்.
- பின்னர் Delete all location history என்பதற்கு கீழே, Automatically delete location history என்பதையும் கிளிக் செய்து கொண்டால், இதற்கு முந்தைய நாட்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய பயண விவரங்களும் தானாகவே அழிந்துவிடும். அதாவது எத்தனை வாரங்களுக்கு முந்தையது, எத்தனை மாதங்களுக்கு முந்தியது என்பதை செட் செய்துவிட்டால் போதும், அத்தனை பழைய பயண விவரங்களும் டெலிட் ஆகிவிடும்
ஐபோன் செட்டிங்: ஐபோன் வைத்திருப்பவர்கள், கூகுள் மேப்ஸ் செட்டிங்ஸ்-ல் Map History-யை தேர்வு செய்து, அதற்கு மேலிருக்கும் "Search" என்ற ஆப்ஷனை பயன்படுத்தி தேதி வாரியாகவும் பயண விவரங்களை டெலிட் செய்துகொள்ளலாம்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications