கேத்தீஸ்வரன் போண்டா மணி ஆனது ஏன்? பின்னணியில் கவுண்டமணி.. இப்படி ஒரு பிளாஷ்பேக்கா?
சென்னை: கேத்தீஸ்வரன் என அழைக்கப்பட்ட போண்டா மணிக்கு அந்த பெயர் எப்படி ஏன் வந்தது தெரியுமா, இதன் பின்னால் இருக்கும் சோகமான பின்னணி என்ன?
இந்த 2023 ஆம் ஆண்டு எந்த நேரத்தில் பிறந்ததோ தெரியவில்லை. தங்களது கஷ்ட காலத்திலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடியன்கள் சிலர் இறந்துவிட்டனர். அதிலும் அவர்கள் காமெடியன்கள் என்பதை விட மனிதம் உள்ளவர்கள் என சொல்லலாம்.

அந்த வகையில் மயில்சாமி, மனோபாலா வரிசையில் போண்டா மணியும் காலமாகிவிட்டார். இலங்கையை சேர்ந்தவர் போண்டா மணி. இவரது தனித்துவ நடிப்பு, அப்பாவித்தனமான பேச்சு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார். இவர் வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து காமெடியில் நடித்துள்ளார். இவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவருக்கு தமிழக அரசு உதவி செய்தது. அத்துடன் சில நடிகர்களும் அவருடைய சிகிச்சைக்கு பண உதவி செய்தனர். இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.
போண்டா மணியின் மகளுக்கு ஐசரி கணேஷ் தனது கல்லூரியில் இலவசமாக படிக்க சீட்டு கொடுத்துள்ளார். போண்டா மணியின் மனைவி மாற்றுத் திறனாளி. அவர் பெயர் மாதவி. இந்த நிலையில் போண்டா மணி மட்டுமே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் இருந்தது. அடிக்கடி வாய்ப்பு கொடுத்து வந்த விவேக்கும் மறைந்துவிட்டார். வடிவேலை எடுத்துக் கொண்டால் அவருக்கே வாய்ப்பில்லை என்கிறார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு சில நிகழ்ச்சிகளில் போண்டா மணி கலந்து கொண்டு வருமானம் ஈட்டி வந்தார். அண்மையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் வீட்டுக்குள்ளேயே ஓய்வெடுத்திருந்தார். நேற்று முன் தினம் நள்ளிரவு அவருக்கு திடீரென குளிர் காய்ச்சல் வந்தது.
இதையடுத்து மயங்கி கீழே விழுந்த போண்டா மணியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சீசர் மனோகரன், பெஞ்சமின் நடிகர் செந்தில், முத்துக்காளை உள்ளிட்டோர் போண்டா மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் போண்டா மணிக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. போண்டா மணியின் ஒரிஜினல் பெயர் கேத்தீஸ்வரன், அவர் சிங்கப்பூரில் வேலை பார்த்த போது அங்கு ஒரு நிகழ்ச்சிக்காக பாக்யராஜ் வந்தார். அப்போது போண்டா மணிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டு சினிமாவில் நடிக்க சென்னை வந்தார். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் சிறிய வேடங்களில் நடித்த இவருக்கு வருமானம் போதிய அளவில் கிடைக்கவில்லை.
ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் கையில் கிடைக்கும் காசில் சாப்பாடு வாங்குவதற்கு பதிலாக போண்டாவை மட்டுமே வாங்கி சாப்பிட்டு பசியை ஆற்றி கொண்டாராம். தனது குருநாதர் கவுண்டமணியில் உள்ள மணியுடன் தனது பசி தீர்த்த போண்டாவை சேர்த்து போண்டா மணி என மாற்றி கொண்டார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications