ரூ 1000 உரிமைத் தொகை.. இந்த காச வச்சி மாசத்திற்கு இத்தனை விஷயங்களை செய்யலாமா? சூப்பரப்பு!
சென்னை: தமிழக அரசு வழங்கும் ரூ 1000 உரிமைத் தொகையை கொண்டு என்னென்ன வாங்கலாம் தெரியுமா?
தமிழக்தில் 1.06 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 செலுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் தமிழக அரசோ தங்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலித்தது.

அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 56.50 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த ரூ 1000 உரிமைத் தொகை திட்டத்தில் இணைய 2.5 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம் இருக்கக் கூடாது. கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போராக இருத்தல் கூடாது.
ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு மேல் மின் நுகர்வு கொண்ட குடும்பங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களும் விதிகள்படி நிராகரிக்கப்பட்டன. தமிழக அரசிடம் ஏற்கெனவே வருமான வரி செலுத்தும் 35 லட்சத்திற்கு மேற்பட்டோரின் விவர பட்டியல், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவாகும் வாகனங்கள் பற்றிய விவரங்கள், 3600 யூனிட்டுக்கு மேல் மின்நுகர்வு செய்யும் 9.5 லட்சத்திற்கு மேற்பட்டோரின் பட்டியல்களும் இருந்தன.
இதைவைத்து தான் சரியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த திட்டமானது இன்று முதல் தொடங்கப்படுகிறது. இதற்கா ஒரே நேரத்தில் கோடிக்கணக்கானோருக்கு பணம் போட்டால் வருகிறதா என்பதை அறிந்து கொள்ள நேற்று முன் தினம் ரூ 1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதலே பல பெண்களுக்கு ரூ 1000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. கடைசி நேரத்தில் ஏற்படும் சர்வர் பிரச்சினையை தவிர்க்கவே நேற்று முதல் ரூ 1000 பதிவு செய்யப்பட்டது. இந்த ரூ 1000 உரிமைத் தொகையை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?
- 25 கிலோ அரிசியை வாங்கலாம்
- ஒரு சிலிண்டர் வாங்கலாம் (918.50 காசுகள்)
- பைக்கிற்கு 9.75 லிட்டர் பெட்ரோல் போடலாம்
- மாதத்திற்கு 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மளிகை சாமான்
- 2 அல்லது 3 வாரத்திற்கு காய்கறிகள்
- 4 பேர் கொண்ட வீட்டிற்கு ஒரு மாதம் பால் வாங்கலாம்
- ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ மட்டும் மட்டன் வாங்கலாம்
- சிக்கனாக இருந்தால் மாதத்தில் 4 முறை வாங்கலாம்
- மீனாக இருந்தாலும் வாரத்தில் 3 அல்லது 4 முறை வாங்கலாம்
- பெண்கள் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்
- செல்வமகன் சேமிப்பு திட்டத்திற்கும் முதலீடு செய்யலாம்
- இரு குழந்தைகளாக இருந்தால் தலா ரூ 500 என இரு செல்வமகள், செல்வமகன் கணக்குகளை ஓபன் செய்யலாம்
- 200 முதல் 400 யூனிட் மின்சாரத்திற்கு பயன் செலுத்தலாம்
- எதிர்காலத்திற்கு தபால் அலுவலகத்தில் R.D. போடலாம்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications