ஆமா! டீசலில் ஓடும் ரயில் லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் கொடுக்கும்.. யோசிச்சிருக்கீங்களா.. தெரிஞ்சுகோங்க
சென்னை: பைக், கார்கள் போன்றவை ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு எவ்வளவு தூரம் ஓடும் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஏன் பேருந்து கூட எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்று தெரியும். ஆனால், டீசல் என்ஜின் கொண்ட் ரயில் எவ்வளவு தூரம் செல்லும் என யோசித்து இருகிறீர்களா.. அதற்கான விடையை இங்கே பார்ப்போம்.
புதிதாக வண்டியை வாங்கி விட்டு நண்பர்களையோ உறவினர்களை சந்தித்தால் அவர்கள் முதலில் கேட்கும் கேள்வி வண்டி எவ்ளோ மைலேஜ் கொடுக்கும் என்பதாகத்தான் இருக்கும். நலம் விசாரிக்கிறார்களோ இல்லையோ.. புது பைக், காரோடு கண்டிப்பாக இதை கேட்காமல் இருக்க மாட்டர்கள். நாம் வாகனத்தை வங்கினால் அது எந்த அளவுக்கு நமக்கு பயன்கொடுக்கும் அதிகம் செலவு வைக்காது என்பதை வைத்தே வாங்குவது பற்றி முடிவு செய்வோம்.

கார், பைக் உள்ளிட்டவற்றை வாங்க ஷோரூம் சென்றால் முதலில் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதுதான் அங்குள்ள ஊழியர்களிடம் நாம் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும். நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் மக்கள் தங்களின் செலவீனங்களை பட்ஜெட் போட்டு வைப்பதன் காரணமாக வரவு செலவு திட்டத்தில் பெரிய துண்டை போட்டு விடக்கூடாது என்பதற்காக மக்கள் மைலேஜ்கள் குறித்தும் வாகனங்களை வாங்கும் முன் முதலில் தெரிந்து வைத்துக் கொள்வார்கள்.
சரி.. இங்கே விஷயத்திற்கு வருவோம். பொது போக்குவரத்து வாகனங்களான பேருந்து, ரயில் எல்லாம் ஒரு லிட்டர் டீசலுக்கு எத்தனை கி.மீட்டர் ஓடும் என்று யோசித்தது உண்டா? அதிலும் கூட பேருந்துகள் கூட எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்று பலருக்கும் தெரிந்து இருக்கும். பேருந்துகளை பொறுத்தவரை சராசரியாக 5 கி.மீட்டர் வரை ஒரு லிட்டர் டீசலுக்கு ஓடும்.

பேருந்துக்கே இப்படி என்றால் நுற்றுக்கணக்கான பயணிகளுடன் செல்லும் ரயில் ஒரு லிட்டர் டீசலுக்கு எத்தனை கி.மீட்டர் ஓடும் என்று யோசித்து இருக்கிறீர்களா? அதற்கான பதிலைத்தான் இங்கே நாம் பார்க்க போகிறோம். 24 முதல் 25 பெட்டிகள் கொண்ட ஒரு ரயில் ஒன்று ஒரு கி.மீட்டர் செல்ல வேண்டும் என்றால் சராசரியாக 6 லிட்டர் டீசல் தேவைப்படும் என்று சொல்கிறார்கள்.
பேசஞ்சர் ரயிலை விட அதிவிரைவு ரயில்கள் கூடுதல் மைலேஜ் கொடுக்குமாம். அது ஏன் என்றால் பேசேஞ்சர் ரயில் பல ஸ்டேஷன்களிலும் நின்று செல்வது முக்கிய காரணமாகும். பேசஞ்சர் ரயில்கள் ஒரு கி.மீட்டர் செல்வதற்கு 5-6 லிட்டர் டீசல் தேவைப்படும். 12 பெட்டிகளுடன் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில் 1 கி.மீட்டர் செல்வதற்கு 4.5 லிட்டர் டீசல் தேவைப்படும்.

அதாவது ஒரு லிட்டர் டீசலில் எவ்வளவு தூரம் செல்கிறது என்று பார்த்தால் எக்ஸ்பிரஸ் ரயில் 230 மீட்டர் தூரம் வரையிலும் பயணிகள் ரயில் 180-200 மீட்டர் வரையிலும் செல்லும் என்று சொல்கிறார்கள். ஆனால் ரயிலை பொறுத்தவரை எத்தனை கி.மீட்டருக்கு டீசல் தேவைப்படுகிறது என்று கணக்கிடமாட்டார்களாம். ரயில் ஒரு மணி நேரம் செல்வதற்கு எவ்வளவு டீசல் தேவைப்படும் என்று கணக்கிட்டப்படும் என்று சொல்லப்படுகிறது.
அப்படி பார்த்தால் ரயில் அதன் முழு எடையுடன் அனைத்து பெட்டிகளுடன் சென்றால் ஒரு மணி நேரம் செல்வதற்கு 400 லிட்டர் வரை டீசல் தேவைப்படுமாம். எனினும், ஒரு ரயில் இத்தனை கிலோ மீட்டர்தான் லிட்டருக்கு கொடுக்கும் என்று, உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் ரயில் செல்லும் வழித்தடம், அதில் எத்தனை பெட்டிகள் உள்ளது என்பதை வைத்து இதன் அளவு மாறுபடும்.












Click it and Unblock the Notifications