100 வயதை தாண்டி வாழும் ஜப்பானிய மக்களின் ரகசியம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 வயதை தாண்டி வாழும் ஜப்பான் மக்களின் ரகசியம் என்ன தெரியுமா? நம் நாட்டு கலாச்சாரத்தை ஜப்பானிய மக்கள் கடைபிடித்து 100 வயது வரை உயிரோடு அதிலும் நோய் நொடியில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் நாம் எப்படியிருக்கிறோம்.

இதுகுறித்து இன்பா என்பவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: ஜப்பானியர்கள் சராசரியாக 85 வயது வரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஆனால் இந்தியர்களால் 72 வயது வரைதான் சராசரியாக வாழமுடிகிறது. அதிலும் கடைசியாக 4 ஆண்டுகளுக்கு மாத்திரை மருந்துகளை உட்கொண்டுதான் வாழ முடிகிறது.

Do you know how Japanese people live super century

அது மாதிரி ஜப்பானில் 100 வயது தொட்டவர்களும் வாழ்கிறார்கள். அதிலும் சூப்பர் சென்சுரி என சொல்லக் கூடிய 110 வயது வரை இன்னும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிய மக்கள் எந்த ரகசியத்தை பின்பற்றி நூற்றாண்டை தாண்டி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்பதை அறியலாம்.

ஜப்பான் மக்கள் பின்பற்றக் கூடிய முதல் ரகசியம் என்னவென்றால் அவர்களுடைய சாப்பாட்டு முறைகள்தான். புளித்த சாப்பாட்டுக்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்ள். உதாரணத்திற்கு பழைய சோறு, கேப்பங்கூழ், கம்பங்கூழ் உள்ளிட்டவைகளை உட்கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் வேக வைத்ததை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

உதாரணத்திற்கு சீனி கிழங்கு மாதிரி! பொரித்த உணவுகளை விரும்பி உண்ண மாட்டார்கள். அதற்கு பதிலாக தீயில் சுட்டு சாப்பிடுவதை அதிகம் விரும்புகிறார்கள். ஜப்பானியர்கள் கூடுமானவரை நடந்தே செல்வார்கள். தேவைப்பட்டால் சைக்கிளில் செல்வார்கள். அதை விட தூரமான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பொது போக்குவரத்தை பயன்படுத்துவார்கள்.

பேருந்து நிலையத்திற்கும் ரயில் நிலையத்திற்கும் ஜப்பானியர்கள் நடந்தோ சைக்கிளிலோ செல்கிறார்கள். ஆனால் நாம் என்ன செய்கிறோம் , ஒரு பால் பாக்கெட்டை வாங்க கூட மோட்டார் பைக்கை எடுத்துச் செல்கிறோம். இதனால் நமக்கு காசும் வீணாகுது, உடலுக்கு ஆரோக்கிய கேட்டையும் ஏற்படுத்துகிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நாம் என்ன செய்கிறோம், காலை 10 மணி வரை தூங்கிவிட்டு செல்போனை பார்த்துக் கொண்டோ டிவி பார்த்துக் கொண்டோ சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்கிவிடுவோம். ஆனால் ஜப்பானியர்கள் என்ன செய்வார்கள் என்றால் விடுமுறை நாட்களிலஸ் தொலைதூரங்களுக்கு சென்று முடிக்கக் கூடிய வேலைகளை முடிக்கிறார்கள்.

அடுத்து நீச்சல் அடிப்பார்கள். இப்படி உடல் ஆரோக்கியத்திற்காகவே விரும்பி செய்வார்கள். அடுத்ததாக ஜப்பானியர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. 60 வயதில் ஓய்வு பெற்றாலும் வீட்டில் சும்மா இருக்க மாட்டார்கள். பக்கத்து வீட்டு பிள்ளைகளை பள்ளிகளுக்கு கொண்டு போய் விடுதல், ஏரியாவை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவைகளை செய்வார்கள்.

இல்லாவிட்டால் கடைசி வரை ஏதாவது ஒரு பிசினஸை செய்துக் கொண்டு 100 வயசு வரை இருப்பார்கள். ஜப்பானியர்கள் எப்போது சாப்பிட்டாலும் அவர்களின் வயிறு 80 சதவீதம் நிறையும் அளவுக்கு மட்டுமே சாப்பிடுவார்கள். மீதி 20 சதவீதம் கேப்பாக இருக்கும். நான் சொன்ன இந்த விஷயம் எல்லாமே நம் முன்னோர்கள் பின்பற்றியது. ஆனால் இதை நாம் பயன்படுத்தாமல் ஜப்பான் நாட்டுக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் நாம் கடைசி காலத்தில் மாத்திரை மருந்துகளுடன் இருக்கிறோம். இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று உணவு கட்டுப்பாடு, சோம்பேறித்தனத்தை தவிர்த்தல் , உடல் உழைப்பு போன்றவை இருந்தால் நாமும் 100 வயசு வரை வாழலாம்தானே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+