எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல்.. அசைக்க முடியாத காமெடியனாக இருந்த லூஸ் மோகனை நினைவிருக்கிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசனுக்கு மெட்ராஸ் பாஷையை சொல்லிக் கொடுத்ததே லூஸ் மோகன்தான்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆர் நாயகனாக நடிக்கும் முன்பு சிறிய, சிறிய பாத்திரங்களில் நடித்தார். அப்போது அவருடன் நடித்த ஒரு சிறுவன் அவருடனே பயணித்து அவருடன் நடித்து அவர் ஆட்சிக்கு வந்த போது அறியப்பட்ட நடிகனானான்.

Do you know how Loose Mohan started his cinema life?

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது நடிக, நடிகையர்க்கு கடிதம் எழுதி போட்டோ வரவழைப்பது ஒரு பொழுது போக்கு. அன்று சினிமா எக்ஸ்பிரஸ் கடைசி பக்கத்தில் வெளியிடப்படும் விலாசத்துக்கு கடிதம் எழுதிவிடுவோம். கடிதம் எழுதிப் போட்டால் மூன்று மாதங்களாகும் போட்டோ வர... ஆனால் ஒரே ஒருவரிடமிருந்து ஐந்தே நாட்களில் போட்டோ வந்துவிடும்.

அவர் வேறு யாருமல்ல. அன்று பிரபலமாக இருந்த நகைச்சுவை நடிகர் லூஸ். A.மோகன். இவர் 80 காலக்கட்டத்தில் ரசிக்கக் கூடிய நகைச்சுவை மன்னனாக இருந்தார். தனியாக 'பொண்ணுன்னா பொண்ணு எம்மாம் பெரிய பொண்ணு..' என்று இவருக்கு பாட்டு வைத்த விஜய்காந்த் படம் உண்டு.
எம்.ஜி.ஆருடன் ஹரிச்சந்திரா படத்தில் லோகிதாசாக நடித்ததாக செய்தி இருக்கிறது.

பின்னாளில் நீதிக்கு தலைவணங்கு, மீனவ நண்பன், நவரத்னம் போன்ற எம்.ஜி.ஆர் படங்களில் நடித்தார். அப்போதெல்லாம் இவர் பெயர் 'ப்ராக்கெட் மோகன்'. இவரது தந்தை பெயர் 'லூஸ்' ஆறுமுகம். அதனால் இவரும் 80க்கு பிறகு லூஸ்.ஏ.மோகன் என மாற்றிக்கொண்டார். அது நன்றாக க்ளிக்கானது.
லூஸ் மோகனின் ஸ்பெஷாலிட்டி சென்னை பாஷை தான். அதிலும் கண்ணை சிமிட்டி அவர் பேசும் ஸ்டைல் வெடிச் சிரிப்பை வரவழைத்து விடும்.

கமல் 'சட்டம் என் கையில்' படமெடுத்த போது லூஸ் மோகன் தான் சென்னை பாஷை பேசக்கற்றுக் கொடுத்தாராம். மலையாள நடிகர் மம்முட்டிக்கு 'ராஜமாணிக்யம்' படத்தில் திருவனந்தபுரம் பாஷை கற்றுக் கொடுக்க வந்த மிமிக்ரிக்காரன் சுராஜ் இன்று மலையாளத்தில் முன்னணி நடிகன். இதே தான் அன்று மோகனுக்கும் நிகழ்ந்தது.

சிவக்குமாரின் ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் சிவக்குமாரின் கையாளாக வரும் லூஸ் மோகன் அப்படம் மூலம் அறியப்படும் நடிகரானார். பின் சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் என பிஸி நடிகரானார். தங்கமகன் படத்தில் ரஜினியோடு போய் பூர்ணிமாவை கலாட்டா செய்வார் மோகன். மோகன் அப்போது செய்த யுக்தி சினிமாவில் அவருக்கு ஜோடியாக நடிகை பிந்துகோஷை சேர்த்துக்கொண்டது.

இவர்கள் இருவரும் அன்று ஹிட் ஜோடி. இவர்களின் ஜோடிப்பாட்டு தான் 'பொண்ணுன்னா பொண்ணு..'. படம் 'வெள்ளைப்புறா ஒன்று'. கவுண்டமணி பீக்கில் இருந்து நாயகனாக நடிப்பேன் என போன போது லூஸ்மோகனின் ராஜ்ஜியமாக இருந்தது. சாதனை படத்தில் சிவாஜி இயக்குனர். அவருடைய க்ளாப் பாயாக லூஸ் மோகன் நடித்தார். நல்ல நகைச்சுவைத் திறமையிருந்த லூஸ் மோகன் 90களுக்கு பிறகு காணாமல் போய்விட்டார்.

கடைசியாக அழகி படத்தில் பாண்டுவின் மாமனாராக அவர் நடிப்பு சிரிப்பு சரவெடி. பெரிய இடத்தை தக்க வைக்க முடியாத லூஸ் மோகன் கடைசி காலங்களில் வாய்ப்பில்லாமல் இருந்தார். மிமிக்ரி ஷோ என்றால் சில குரல்களை பேசாமல் இருக்க மாட்டார்கள். அதில் ஒன்று லூஸ் மோகனுடையது என்பதிலேயே அவர் தனித்தன்மை தெரியும். பிப்ரவரி 8ஆம் தேதி லூஸ் மோகனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவில் இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+