லெஜன்ட் சரவணனுக்கு இத்தனை சொகுசு கார்களா? வீடியோவை பார்த்து எத்தனைனு 45 செகண்டில் கண்டுபிடிங்க!
சென்னை: நம்ம லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணனிடம் இத்தனை கோடி மதிப்பிலான சொகுசு கார்களா, இந்த வீடியோவை பார்த்தால் சினிமாவில் பணக்கார வில்லனுக்கு பில்டப் கொடுப்பது போல் உள்ளது.
லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் எனும் பெயரில் ஜவுளிக் கடை, பல சரக்கு கடை, ஹேர்பின் முதல் பேட்டரி ஏரோபிளேன் வரை அனைத்தும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும். இவை விலை குறைவாக கிடைப்பதால் பலர் சரவணா ஸ்டோர்ஸ்களில் காய்கறி, பழங்களை வாங்குகிறார்கள்.

மாதம் பிறந்தவுடன் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கடைகளில் பில் போட கூட நீண்ட வரிசை இருக்கும். அந்தளவுக்கு மக்கள் அண்ணாச்சி கடையில் விற்பனையாகும் மளிகை பொருட்கள் மூலம் நாலு காசை மிச்சப்படுத்துகிறார்கள். இதுவரை வெகு சிலருக்கு மட்டுமே சரவணா ஸ்டோர்ஸின் ஹிஸ்டரி தெரிந்திருந்தது.
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம், ஒரு கட்டத்தில் பெரிய தலைகள் இயங்காத நிலையில் அவர்களின் வாரிசுகள் தனியாக கடை வைத்து கொண்டனர். அந்த வகையில் உருவானதுதான் சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய், லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஆகும். இந்த கடைகளில் வேலை வாய்ப்பு மூலம் ஏராளமானோரின் குடும்பத்தில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறார் அண்ணாச்சி.

கடைக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அங்கு பணியாற்றும் சின்ன சின்ன பெண்கள் நம்மை உரிமையுடன் அக்கா, அண்ணா, அம்மா, அப்பா, அப்பத்தா, ஐயா என அழைப்பதை பார்த்தால் நெகிழ்ச்சியாக இருக்கும். அப்படிப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அருள் சரவணன், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவர் சென்னையில் வசித்து வருகிறார். தனது பிராண்டை தன்னை விட விளம்பரம் செய்ய வேறு யாரும் இல்லை என்ற அடிப்படையில் அவருடைய கடை விளம்பரங்களில் அவரே நடித்தார். அதன் எதிரொலியாக போத்தீஸ், லலிதா ஜுவல்லர்ஸ், ஆச்சி மசாலா ஆகியவற்றின் ஓனர்கள் தங்கள் நிறுவனத்தின் பொருட்களை விளம்பரங்கள் மூலம் சந்தைப்படுத்த தொடங்கினர்.

அருள் சரவணன் லெஜன்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை அவரே தயாரித்து நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை அடைந்தாலும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலே ஹிட்டானது. அந்த பாடல்தான் தற்போதும் அண்ணாச்சி கடைகளில் ஒலிக்கும், ஒளிக்கும். இந்த படத்தில் நடித்த விவேக் மறைந்த போது அண்ணாச்சி அவரது குடும்பத்தினரிடம் பேசி இறுதி சடங்குகளுக்கான செலவுகளை அவரே ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது போல் தனது வீட்டில் கீழ் தளத்தில் எப்போதும் சாப்பாடு போட்டு வருகிறார்கள். இங்கு 24 மணி நேரமும் உணவு வழங்கப்படுகிறது. ஏழைகள் பசியாற அண்ணாச்சியின் தர்ம காரியம் இது. அண்ணாச்சி அடுத்த படத்திலும் கமிட்டாகியுள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
Thalaivaaa @yoursthelegend ❤️🔥 pic.twitter.com/tBpFZ24kO8
— 𝑩𝑨𝑹𝑨𝑵𝑰 𝑺𝑴 (@BaraniDharanSM) August 4, 2023
அதில் அண்ணாச்சி சரவணனுக்கு இத்தனை சொகுசு கார்களா என கேட்கும் அளவுக்கு உள்ளது. மஞ்சள், சிகப்பு, வெள்ளை, சில்வர், கருப்பு,வெள்ளை- சிகப்பு என டபுள் கலர் என கார்கள் சினிமாக்களில் வருவது போல் பறக்கின்றன. இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். லெஜன்ட் சரவணனுக்கு டேக் செய்து தலைவா என அழைத்துள்ளார். வாம்மா மின்னலில் வருவது போல் சொகுசு கார்கள் வேகமாக சீறி பாய்கின்றன. வீடியோவில் மொத்தம் 11 சொகுசு கார்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications