விஜயின் தமிழக வெற்றி கழகத்தை விடுங்க! தமிழ், தமிழ்நாடு, தமிழகம் பெயரில் இத்தனை கட்சிகளா?
சென்னை: தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற பெயரில் இத்தனை கட்சிகளா உள்ளது? அதன் பட்டியலை பார்ப்போம்.
தமிழ், திராவிடம், புரட்சி, தேசியம் உள்ளிட்ட வார்த்தைகளுக்கு தமிழகத்தில் அதிக பவர் உள்ளது. இதனால்தான் அரசியல் கட்சிகளும் இந்த பெயர்களை தங்கள் கட்சி பெயர்களில் புகுத்திக் கொள்கின்றன.

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் தற்போது தொடங்கியுள்ளார். அவரது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் ஆகும்.
அதாவது விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக நேற்றைய தினம் பதிவு செய்தார். இந்த விஜய் மக்கள் இயக்கம் ஏற்கெனவே மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. அது போல் இந்த இயக்கத்தின் கொடியை வைத்து கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நிறைய இடங்களில் பிரதான கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.
அவர் தொடங்கிய கட்சியின் பெயரில் இரு கேள்விகள் மக்களுக்கு எழுகின்றன. ஒன்று தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை சூட்டியது ஏன், இன்னொன்று வெற்றிக் கழகமா இல்லை வெற்றி கழகமா என்பதுதான். இது ஒரு புறமிருக்க தமிழகத்தில் தமிழ், தமிழக, தமிழ்நாடு என தொடங்கும் கட்சிகள் எத்தனை உள்ளது என்பதை பார்க்கலாம்.
தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில கட்சி, தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாடு இளைஞர் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, தமிழ் தெலுங்கு தேசிய கட்சி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி, தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் நலக் கட்சி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், தமிழர் தேசிய முன்னணி, தமிழர் மக்கள் கட்சி, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி, தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு பேரியக்கம், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழர் தேசம் கட்சி ஆகியவை ஆகும்.
அதாவது விஜய் கட்சியை சேர்க்காமல் மொத்தம் 21 கட்சிகள் உள்ளன. இவற்றில் தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சியை தவிர மற்றவை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனினும் தமிழ், தமிழகம், தமிழ்நாடு என தொடங்கும் பெயரில் தமிழகத்தில் 21 கட்சிகள் உள்ளன.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications