தி.மு.க-அ.தி.மு.க , தி.மு.க.-பா.ம.க நேரடியாக மோதும் இடங்கள் எத்தனை தெரியுமா? செம டுவிஸ்ட் இருக்கு!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒட்டுமொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றாலும் திமுக-அதிமுக, பாஜக-திமுக உள்ளிட்ட கட்சிகளின் நேரடி போட்டியை காண மக்கள் ஆர்வதத்துடன் உள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்தது.

தமிழக கூட்டணி
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும் மோதின. இது தவிர மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி களமிறங்கின. நாம் தமிழர் கட்சி தனியாக களம் கண்டது. தமிழகத்தை பாடாய்படுத்திய கொரோனாவுக்கு மத்தியில் இந்த கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

எத்தனை இடங்களில் போட்டி?
ஒட்டுமொத்தமாக இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றாலும், சில குறிப்பிட்ட கட்சிகளின் கடும் போட்டியைத் தான் மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதாவது அதிமுக-திமுக, திமுக-பாஜக, விசிக-பாமக என கட்சிகளின் போட்டி மிகுந்த பரபரப்பை கொண்டுள்ளது. எந்த கட்சி யாருடன் எத்தனை இடங்களில் மோதுகிறது? என்பதை பற்றி இப்போது காண்போம்.

திமுக-பாஜக மோதும் இடங்கள்
அ.தி.மு.க. - தி.மு.க. 130 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அ.தி.மு.க. - காங்கிரஸ் 14 தொகுதிகளில் மோதுகின்றன. தி.மு.க. - பா.ஜ.க 14 இடங்களில் நேரடியாக மல்லுக்கட்டுகின்றன. மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளான தி.மு.க. - பா.ம.க. 18 தொகுதிகளில் கோதாவில் இறங்கியுள்ளன.

த.மா.கா-காங்கிரஸ்
இது தவிர தி.மு.க. - த.மா.கா. - 4; காங். - த.மா.கா. - 2; காங். - பா.ஜ.க 5; காங். - பா.ம.க. 3; அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5; பா.ஜ.க - இந்திய கம்யூ - 1: அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5; பா.ம.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 1; அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5; பா.ம.க. - வி.சி.க - 1; அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3; அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 ஆகிய தொகுதிகளில் இந்த கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications