தங்கத்தை வீட்டிற்குள் வைக்கலாமா? பெண் எவ்வளவு நகை வைக்கலாம்? ஆண் எவ்வளவு வைக்கலாம்? அதற்கு வரி உண்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் அதிக சொத்து மதிப்பு கொண்ட பொருட்களை வருமான வரி தாக்கலில் சேர்க்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ள நிலையில், வீட்டில் எவ்வளவு தங்க நகைகளை நாம் வைத்திருக்கலாம்? என்பது குறித்த அளவீடுகள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

இந்தியாவிலேயே முக்கியமாக தென்னிந்தியாவில், தங்கம் மிகுந்த கவுரவம் தரக்கூடிய பொருளாக மதிக்கப்படுகிறது... எனவேதான் பிறப்பு முதல் திருமணம் வரை என வாழ்வின் அனைத்து மகிழ்ச்சி தருணங்களிலும், தங்க நகைகளுக்கென்று பிரத்யேக இடம் இருக்கிறது.

gold gold jewellery income tax

தங்க நகை மோகம்: தென்னிந்தியாவிலேயே, அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான்.. காரணம், தங்க நகைகள் மீதான மோகம் பெண்களிடம் இன்னமும் குறையாமல் இருக்கிறது.. தங்கத்தின் மதிப்பும், விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. எவ்வளவுதான் விலை உயர்ந்தாலும், தங்க நகைகளை ஆர்வத்துடன் வாங்குவது மட்டும் மக்களிடம் குறைவில்லை.

அதேபோல, தங்கம் ஒரு நல்ல முதலீட்டு தேர்வாகும். எனவேதான் சிலர் தங்கத்தை வீடுகளிலும் வைத்திருப்பார்கள். இதற்கு காரணம், வீட்டில் தங்கம் இருந்தால், அந்த குடும்பமே செழிப்பாக இருக்கும் என்று நம்பிக்கை பலரிடம் உள்ளது.. அனைத்து வங்கிகளிலுமே லாக்கர் வசதி இருந்தாலும்கூட, தங்களது வீட்டில் நகைகளை வைத்திருப்பதிலேயே பலருக்கும் விருப்பம் உள்ளது. இப்படி வீட்டில் தங்கம் வைப்பதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா என்ற கேள்வி பலர் மனதிலும் அடிக்கடி எழலாம்.

விதிமுறைகள்: நிச்சயம் சில விதிமுறைகள் உள்ளன.. எவ்வளவு தங்கத்தை நாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான அரசாங்க விதிகள் இருக்கின்றன.. இதனை வரித்துறையும் பலமுறை தெளிவுபடுத்தியும், விவரித்தும் வருகிறது.

வீட்டில் தங்கம் வைத்திருப்பது குறித்து அரசு எந்த வரம்பும் விதிக்கவில்லையானாலும்கூட, தங்கம் அல்லது தங்க நகை தொடர்பாக சரியான ஆதாரம் மற்றும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

வழிமுறைகள்: வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தும்போது, வீட்டிலுள்ள நகைகளை பறிமுதல் செய்து எடுத்துச்செல்வது வழக்கம். இதனால், வருமான வரி செலுத்துவோருக்கும், வரித்துறையினருக்கும் இடையே பதற்றமான சூழல் பலமுறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கடந்த1994ம் ஆண்டில், தங்கம் தொடர்பாக சில வழிமுறைகளை வெளியிட்டிருந்தது.

அதன்படி, ஒரு நபரின் பாலினம், திருமண நிலை போன்றவற்றின் அடிப்படையில் இந்த நகைகளை வைத்து கொள்ள அனுமதி உண்டு.. அதன்படி, திருமணமான பெண் 500 கிராம், அதாவது 62.5 சவரன் தங்கத்தையும், திருமணமாகாத பெண் 250 கிராம், அதாவது, 31.25 சவரன் மதிப்புள்ள தங்கத்தையும் வைத்துக்கொள்ளலாம்.

ஆதாரங்கள்: திருமணமான மற்றும் திருமணமாகாத என 2 தரப்பு ஆண்களுமே, 100 கிராம் எடையுள்ள அதாவது 12.5 சவரன் தங்க ஆபரணங்களையும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வைத்திருக்கலாம்.

சோதனையின் போது மேலே குறிப்பிட்ட அளவுள்ள தங்க நகை வாங்கியதற்கான ஆவணங்கள் இல்லையென்றாலும், அவற்றை பறிமுதல் செய்ய முடியாது. எனவே, வருமான வரித்துறையின் சோதனையின்போது, வரி செலுத்துவோரின் நகைகளை பறிமுதல் செய்வதிலிருந்து விடுவிப்பதற்காக மட்டுமே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் அதிக சொத்து மதிப்பு கொண்ட பொருட்களை வருமான வரி தாக்கலில் சேர்க்க வேண்டும்.

Olyv-ன் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரோஹித் கார்க் இதுகுறித்து கூறும்போது, "உதாரணத்துக்கு 450 கிராம் தங்கம் வைத்திருக்கும் திருமணமான பெண், வரி அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பில்லை. எனினும், இந்த வரம்புகளை மீறினால் அபராதங்கள், சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வரிவிதிப்பு: தங்கத்தை பரிசாகவோ அல்லது பரம்பரையாகவோ பெற்றிருந்தால், அதற்கான ஆவணத்தை காட்ட வேண்டிவரும்.. வருமான வரிக் கணக்கிலும் இதை குறிப்பிட்டாக வேண்டும். ஒரு ஆவணமாக, தங்கத்தை பரிசளித்த நபரிடமிருந்து பெறப்பட்ட ரசீதைக் காட்டலாம்" என்கிறார். வருமான வரிசோதனையின்போது பிடிபடும் கூடுதல் தங்கத்திற்கு 60 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேல் தங்கம் வாங்கினால், வருமான வரி விதிகளின் 114பி பிரிவின் கீழ் உங்களுடை பான் கார்டை வழங்குவது அவசியம்.. அதேபோல, வருமான வரிச் சட்டத்தின் 269ST பிரிவின் கீழ், தங்கம் வாங்க ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய முடியாது. ஒருவேளை இதைத்தாண்டி வாங்க நேர்ந்தால், வருமான வரிச் சட்டத்தின் 271D பிரிவின் கீழ் பணப்பரிவர்த்தனை தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படும் என்பது கவனத்திற்குரியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+