Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்! மலைக்க வைக்கும் செலவு! பெயிண்ட் அடிப்பது முதல் பார்க்கிங் வரை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 44-ஆவது சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறுகிறது.

இதனையொட்டி நெடுஞ்சலைத் துறை மற்றும் பொதுப் பணித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

என்னென்ன பணிகள் எவ்வளவு பட்ஜெட்டில் செய்யப்பட்டு வருகிறது என்பதை இங்கே காணலாம்.

மொத்தம் 57 கி.மீ

மொத்தம் 57 கி.மீ

*சென்னை பன்னாட்டு விமான நிலையம் - மத்திய கைலாஷ் -சோழிங்கநல்லூர் - அக்கரை - பூஞ்சேரி - 4 பாயின்ட் ஷரட்டான் (வழித்தடம்-1) நீளம் - 57.00 கி.மீ.

*ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ஜிஎஸ்டி சாலையில் விமான நிலையம் முதல் சின்னமலை வரை 10.10 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.10.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

*ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் விமான நிலையம் எதிரே உள்ள சாலை மேம்பாலத்தில் பசுமை பூங்கா அமைத்து அழகு படுத்தும் பணி ரூ.96.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வணக்கம் சென்னை

வணக்கம் சென்னை

*மேலும், திட்டம் சாரா பணியின் கீழ் நெடுஞ்சாலை பூங்காவில் செயற்கை நீரூற்று மற்றும் "வணக்கம் சென்னை" பதாகை அமைக்கும் பணி ரூ.47.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

*சாலை வரையரைக் கோடு மற்றும் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்கும் பணி ரூ25.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

*மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான 20.2 கி.மீ. நீள சாலையில் மையத்தடுப்பானில் வண்ணம் பூச்சு பணி ரூ.85.00 இலட்சம் செலவிலும் சாலை பாதை வரையரைக் கோடிடும் பணி (Lane Marking) ரூ.160.00 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகின்றன.

வண்ணம் பூச்சு

வண்ணம் பூச்சு

*இந்த சாலையில் அமைந்துள்ள 14 சாலை பாதசாரிகள் நடைபாதைகள் ரூ.58 லட்சம் செலவில் வண்ணம் பூச்சு செய்யும் பணி எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது.

*கிழக்கு கடற்கரை சாலையினை இணைக்கும் 2.4 கி.மீ. நீள சாலையில் 1 கி.மீ. நீளத்திற்கு ரூ.120 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

*மகாபலிபுரம் முதல் பூஞ்சேரி வரையிலான 2.4 கி.மீ. நீளசாலை ரூ.189 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.499 லட்சம்

ரூ.499 லட்சம்


* அக்கரை முதல் மகாபலிபுரம் வரையில் சாலை மையத்தடுப்பில் வண்ணம் பூசுதல், சாலைப்பாதை வரையரைக் கோடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அமைத்தல், 55 சோலார் எச்சரிக்கை சமிக்ஞை விளக்குகள் அமைத்தல் மற்றும் சாலை புருவங்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.499 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

*சாலையில் நகரப் பகுதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் மற்றும் உயர்மின் கோபுர விளக்குகள் அனைத்தும் ரூ.80 லட்சம் செலவில் சரி செய்யப்பட்டு வருகின்றது.

 வழித்தடம் -2

வழித்தடம் -2


*சென்னை பன்னாட்டு விமான நிலையம் - பல்லாவரம் - துரைப்பாக்கம் -சோழிங்கநல்லூர் - கேளம்பாக்கம் - பூஞ்சேரி - 4 பாயின்ட் ஷரட்டான் (வழித்தடம் -2) நீளம் - 57.00 கி.மீ.

*ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை 5.85 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

*இச்சாலையில் 10.00 கி.மீ நீளத்திற்கு சாலை வரையரைக் கோடு, சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பெரிய தகவல் பலகைகள் அமைக்க ரூ.111.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

*மேலும், திட்டம் சாரா பணியின் கீழ் மைய தடுப்புச் சுவருக்கு கருப்பு வெள்ளையடித்தல், பசுமை செடிகள் வளர்த்தல், சாலையோரம் உள்ள மண்குவியல்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் ரூ.48.80 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

இராஜீவ்காந்தி சாலை

இராஜீவ்காந்தி சாலை

*ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் கேளம்பாக்கம் முதல் திருப்போரூர் வரை 4.70 கி.மீ. நீளத்திற்கு ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் சாலையை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

*இச்சாலையில் திட்டம் சாரா பணியின் கீழ் சிறுசேரி முதல் திருப்போரூர் வரை பழுதடைந்த உயரம் குறைந்த மைய தடுப்புச் சுவருக்கு மாற்றாக பசுமைச் செடிகள் அமைக்க மைய தடுப்பான்கள் அமைக்கும் பணி ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

*திருப்போரூர் முதல் பூஞ்சேரி வரை 10.00 கி.மீ. நீளத்திற்கு மத்திய தடுப்புச் சுவர் பழுது பார்த்தல், வர்ணம் அடித்தல் மற்றும் மண் புருவங்களை பழுதுபார்த்தல் பணிகள் ரூ.50.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

மாமல்லபுரம் நகரில்

மாமல்லபுரம் நகரில்

*மாமல்லபுரம் நகரில் 800 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் ரூ.120.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

*மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதி சாலை 400 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை பழுதுபார்த்தல் மற்றும் கிரானைட் கற்கள் அமைக்கும் பணிகள் ரூ.41.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

*மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி சாலையில் 300 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் அமைக்கும் பணி ரூ.5.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

*மாமல்லபுரம் கடற்கரை கோயில் சாலையில் 225 மீட்டர் நீளத்திற்கு வரை பேவர்பிளாக் அமைக்கும் பணி ரூ.5.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

*மாமல்லபுரம் ஐந்துரத சாலையில் 300 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை பழுது பார்த்தல் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல் பணி ரூ.15.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட பணிகள் அனைத்தும் நெடுஞ்சாலைத் துறையின் உள்ஒதுக்கீட்டின் கீழ் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகள் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கார்கள் நிறுத்த

கார்கள் நிறுத்த

*5.75 ஏக்கர் பரப்பளவில் 100 பேருந்துகள் மற்றும் 50 கார்கள் நிறுத்த இடவசதி. வாகன நிறுத்துமிடத்தில் மழைநீர் தேங்காவண்ணம் வடிகால் வசதி. வாகன ஓட்டுனர் ஓய்வு அறை, கழிவறை வசதிகள்.

*விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு சோதனை மையம். மருத்துவ அவசர சிகிச்சைக்காக மருத்துவ அறை. ஊடகம் மற்றும் பார்வையாளர்கள் வாகன நிறுத்துமிட பாதுகாப்பு சோதனை பகுதி.

*காவல் கட்டுப்பாட்டு மையம், கண்காணிப்பு மற்றும் உயர் அலுவலர் அறை. முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு சோதனை மையம்.

மின் பணிகள்

மின் பணிகள்

*500 KVA மின்மாற்றி (Transformer), சர்கியூட் பிரேக்கர்ஸ் மற்றும் MV பேனல். குளிர்சாதன வசதிக்கு ஜெனரேட்டர் 500 KVA-12 எண்ணம், 250 KVA-4 எண்ணம்.

*LED மின் விளக்கு மின் கோபுரம். CCTV கண்காணிப்புப் கேமரா கோபுரம். தடையில்லா மின்சாரம் வழங்க ஆன்லைன் UPS.

* இப்பணிகள் 80 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள பணிகள் அனைத்தும் 24.07.2022-க்குள் முடிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+