மகளின் திருமண விருந்து.. தலைக்கு இத்தனை ஆயிரமா?.. மொத்த செலவு எவ்வளவு?.. அண்ணாச்சி லெஜண்டின் அசத்தல்
சென்னை: தி லெஜண்ட் படம் வந்தாலும் வந்தது, நாள்தோறும் அண்ணாச்சி சரவணன் அருள் குறித்த விவரங்களை நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள்.
தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்த தி லெஜண்ட் படம் சுமார் 2500 தியேட்டர்களில் ஓடி வசூல் சாதனையை புரிந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் அண்ணாச்சி அருள் குறித்த பேச்சாகவே இருக்கிறது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணா நாடார். இவருக்கு மூன்று மகன்கள். அவர்கள் செல்வரத்தினம் யோக ரத்தினம், ராஜரத்தினம். இவர்களில் இளைய மகனான செல்வரத்தினம்தான் சென்னையில் வியாபாரத்தில் தனது வெற்றி கொடியை நாட்டினார்.

வியாபாரம்
தனது வியாபாரத்தில் நல்ல நிலையை அடைந்தவுடன் செல்வரத்தினம் தனது சகோதரர்களின் குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்து வந்து அவர்களும் வியாபாரம் செய்ய உதவினார். இதையடுத்து செல்வரத்தினம் இறந்தவுடன் அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வந்து கடைகளும் பிரிந்தன. செல்வரத்தினத்தின் மகன்தான் சரவணன் அருள்.

கடை விஸ்தரிப்பு
இவர் நாளடைவில் தனது கடையை விஸ்தரித்து முன்னணி நகரங்களில் கிளைகளை அமைத்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறார். இவர் அவருடைய கடையின் விளம்பர படத்தில் நடிகைகள் ஹன்சிகாவுடனும் நடிகை தமன்னாவுடனும் நடிக்கும் வரை அண்ணாச்சியை யாருக்குமே தெரியாது. அதன் பின்னர் அவர் கடை விளம்பரங்களில் அவரே நடித்து பிரபலமானார்.

தி லெஜண்ட்
தற்போது தானே சொந்த தயாரிப்பில் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார் என்றே படத்தை பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இந்த படம் வெளியானது முதல் சரவணன் அருள் குறித்து நெட்டிசன்கள் அதிகம் தேடி வருகிறார்கள்.

வெகுவிமரிசை
மேலும் அவரது மகளுக்கு 2017 ஆம் ஆண்டு வெகுவிமரிசையாக திருமணம் நடத்தி வைத்தார் அருள். அதுகுறித்த தகவல்களும் மீண்டும் சமூகவலைதளங்களில் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளன. அவரது மகளுக்கு ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

ரூ 6000 செலவு
இந்த திருமணத்திற்கு வந்தவர்களின் ஒருவரது உணவுக்கு மட்டும் ரூ 6000 செலவிடப்பட்டதாம். எப்படியும் உணவுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவாகியிருக்கும் என்கிறார்கள். அது போல் அவரது மகள் திருமண வரவேற்பிக்காக அணிந்த உடை மட்டும் ரூ 15 கோடியாகும். இதில் தங்கத்தால் ஆன இழை, டைமண்ட் உள்ளிட்ட விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்ததாம்.

அண்ணாச்சி மகளின் திருமணம்
அண்ணாச்சிக்கு தனது மகளின் திருமணத்திற்கு மட்டும் ரூ 100 கோடி வரை செலவழித்ததாக சொல்லப்படுகிறது. தற்போது ஒரு படத்தின் வெற்றியை சுவைத்த அருள், இன்னொரு படத்தை தயாரிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறாராம். தி லெஜண்ட் படத்தில் மக்கள் தெரிவித்த குறைகளை இந்த படத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications