TVK Vijay: "கைமுறுக்கப்படும்" எடப்பாடி.. விஜய் கேட்ட சீட் எத்தனை? எதோ நடக்க போகுது.. எச்சரித்த தலை
சென்னை: அதிமுகவில் எதோ நடக்கிறது. சில நாட்களில் எடப்பாடியை ஆர்ம் ட்விஸ்ட் செய்ய வாய்ப்புகள் உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைக்க போவதாக பேச்சுக்கள் வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது, என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - தமிழக வெற்றிக் கழகம் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவில் எதோ நடக்கிறது. சில நாட்களில் எடப்பாடியை ஆர்ம் ட்விஸ்ட் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான செய்திகள் வரும் என்கிறார்கள். எடப்பாடிக்கு எதிராக டெல்லி முக்கிய மூவ் எடுக்க போவதாக செய்திகள் வருகின்றன. இது எந்த மாதிரி வெடிக்க போகிறது.. இதற்கெல்லாம் யார் மணி கட்ட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேட்டி:
எதோ நடக்க போவதாக செய்திகள் வருகின்றன. அதை பார்க்கலாம். எடப்பாடி அரசியல் கணக்கெல்லாம் தவறு தவறாக போடுகிறார் என்ற புகார் உள்ளது. அவர் எடுக்கும் முடிவுகள் வலுவாக இல்லை என்ற புகார்கள் உள்ளன. எடப்பாடி போட்ட கணக்குகள் தவறாகிவிட்டது. திமுகவின் தொடர் வெற்றிகளுக்கு காரணம் அதிமுகதான்.
எடப்பாடி எடுக்கும் முடிவெல்லாம் ஸ்டாலினுக்குத்தான் சாதகமாக உள்ளது. திமுகவிற்குத்தான் சாதகமாக உள்ளது. திமுக அடுத்தடுத்து வெற்றிபெற எடப்பாடிதான் காரணம். எடப்பாடி எடுத்த தவறான முடிவுகள்தான் காரணம். இதெல்லாம்தான் அதிமுகவின் டாப் தலைவர்கள் கோபம் அடைய முக்கியமான காரணம்,
இப்போது தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைக்க போவதாக பேச்சுக்கள் வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. அதிமுகவிடம் 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளதாக கூறுகிறார்கள்.
அது உண்மையா என்று தெரியவில்லை. 117 இடங்கள் கொடுக்கும் வரை விஜய் வளர்ந்தாரா என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி அந்த அளவிற்கு இறங்கி போக கூடாது. ஆனால் அதிமுக தொண்டர்களுக்கு இது உற்சாகம் கொடுக்கும். விஜய் கட்சியின் வளர்ச்சிக்கு இது உதவும். ஆனால் விஜய் இமேஜ் உடையும். யாரும் சரியில்லை என்று கூறிவிட்டு வந்தவர்.. அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது.
நாம் சமமான பலம் உள்ளவர்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் நினைக்கிறது. ஆனால் அதை அதிமுக ஏற்குமா என்பது தெரியாது. அதிமுகவிற்கு வேறு வழியில்லை. ஒன்று பாமக உடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால் விஜய் உடன் கூட்டணி வைக்க வேண்டும். வேறு வழியில்லை. தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொண்டர்களுக்கு இது உற்சாகம் கொடுக்கும்.. என்ன நடக்கும் என்று தெரியாது.. ஆனால் எதோ நடக்க போகிறது என்பது மட்டும் உறுதி என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications