குணா படத்தின் கண்மணி அன்போடு பாடல்! எவ்வளவு நேரத்தில் இளையராஜா கம்போஸ் செய்தார் தெரியுமா?
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடலுக்கு இசையமைக்க இளையராஜா எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா?
பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவானது மஞ்சுமெல் பாய்ஸ் படம். இந்த படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியான இந்த படம் கேரளத்தை விட தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்று வசூலைக் குவித்து வருகிறது. இந்த படம் நட்சத்திர நடிகர்களுக்கு இணையாக வசூலை குவித்து வருவதால் இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ரூ 50 கோடிக்கு மேல் வசூலான இந்த படம் விரைவில் ரூ 100 கோடியை தாண்டும் என தெரிகிறது. இந்த படம் 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் குணா குகையை நினைவுப்படுத்துகிறது. கேரளாவிலிருந்து திண்டுக்கல்லுக்கு செல்லும் நண்பர்கள் குழுவினரில் ஒருவர் குணா குகையில் இருந்து கால் தவறி விழுந்து விடுகிறார்.
அந்த பள்ளத்தில் விழுந்தவர்கள் யாருமே இதுவரை பிழைத்ததில்லை என சொல்லப்படுகிறது. இதனால் தீயணைப்பு வீரர்களும் விழுந்த நபர் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை என்பதால் இறங்க தயங்குகிறார்கள். அப்போது ஒரு நண்பன் மட்டும் தான் இறங்குவதாக சொல்கிறார். மற்ற நண்பர்கள் தடுத்து பார்த்தும் அவர் கேட்பதாக தெரியவில்லை.
பின்னர் தீயணைப்பு துறையினர் கொண்டு வந்த கயிற்றின் மூலம் அவர் இறக்கப்படுகிறார். அங்கு போய் பார்த்தால் விழுந்த நண்பர் ரத்த வெள்ளத்தில் மயக்கத்தில் இருக்கிறார். உடனே மகிழ்ச்சியுடன் அவரை மேலே கொண்டு வந்து அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இதுதான் இந்த படத்தின் கதைக் கரு. இது உண்மைச் சம்பவம் என்கிறார்கள்.
1991 ஆம் ஆண்டு இயக்குநர் சந்தானபாரதியின் குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் இந்த குணா குகையில் எடுக்கப்பட்டது. அதன் பிறகு 23 ஆண்டுகள் கழித்து இந்த மஞ்சுமெல் பாய்ஸ் மூலம் மீண்டும் குணா குகை பிரபலமடைந்துள்ளது.
குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா,. பாடலை பாடியவர் கமல்ஹாசன், பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இந்த பாடல் பெரிய ஹிட்டடித்தது. இந்த பாடல் மட்டும் இல்லை குணா படத்தில் வந்த அனைத்து பாடல்களையும் சேர்த்து 2 மணி நேரத்தில் இளையராஜா இசையமைத்தாராம். இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் வருகின்றன. அவற்றின் மொத்த நேரம் 22 நிமிடங்கள் 19 வினாடிகளாகும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications