ரயிலில் அபாய சங்கிலியை இழுத்தால்.. அதிகாரிகள் கரெக்டா அந்த பெட்டியை எப்படி கண்டுபிடிக்கிறாங்க?
சென்னை: உடனடியாக ரயிலை நிறுத்துவதற்கு ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் அபாய சங்கிலி பொறுத்தப்பட்டிருக்கும். இதனை பிடித்து இழுத்தால் உடனடியாக ரயில் நின்றுவிடும். ஆனால் அதில் எந்த பெட்டியில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டது என்பதை அதிகாரிகள் எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பது ரயில்வே துறைதான். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணம் செய்து வருகிறார்கள். ரயில்களில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

ரயில்களின் பாதுகாப்பு வசதியாக இருக்கட்டும், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் சவுகரியங்கள் ஏற்படுத்தி கொடுப்பதாக இருக்கட்டும் என தொடர்ந்து ரயில்வே பல்வேறு அப்டேட்களை மேற்கொண்டு வருகிறது. ரயில்களிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வசதிகள் உள்ளன. குறிப்பாக அவசர காலங்களில் பயணிகள் ரயிலை நிறுத்துவதற்காக ஒவ்வொரு ரயிலிலும் எமர்ஜென்சி சங்கிலி கொடுக்கப்பட்டு இருக்கும்.
ரயிலில் அபாய சங்கிலி: அடிக்கடி ரயில் பயணம் மேற்கொண்டு இருப்பவர்கள் இதை கவனித்து இருக்கலாம். ரயில் நிலையத்தில் ஏதேனும் பயணிகளுக்கு அவசர தேவை ஏற்பட்டு ரயிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இந்த சங்கிலியை பிடித்து இழுத்தால் உடனடியாக ரயில் நிறுத்தப்படும். எந்தப் பெட்டியில் இருந்து சங்கிலி இழுக்கப்பட்டதோ அந்த பெட்டிக்கே நேரடியாக ரயில்வே அதிகாரிகள், ரயிலை அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததற்கான காரணம் குறித்து விசாரிப்பார்கள்.
உரிய காரணம் இன்றி ரயில் நிறுத்தப்பட்டால் உடனடியாக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் ஓராண்டு வரை சிறைத்தண்டனை கூட விதிக்கப்படும். அண்மையில் கூட முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிக்குள் வட இந்திய தொழிலாளர்கள் கூட்டமாக டிக்கெட் இன்றி பயணித்ததால் உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பயணி நிறுத்தினார். இப்படி ரயில்கள் நிறுத்தப்படும் செய்திகளை அவ்வப்போது கேள்வி பட்டு இருப்போம்... அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.
எப்படி கண்டுபிடிப்பார்கள்?: சுமார் 20 பெட்டிகளுக்கு மேல் இருக்கும் விரைவு ரயில்களில் எந்த பெட்டியில் இருந்து சங்கிலியை இழுத்தாலும் சரியான பெட்டிக்கு அதிகாரிகள் வந்து விடுகிறார்களே... அவர்களுக்கு இந்த தகவல் எப்படி கிடைக்கும்.. இந்த தொழில்நுட்பம் எப்படி இயங்குகிறது என்பது குறித்து பார்க்கலாம். ரயில்வேயில் என்ஜினியராக பணியாற்றுவதாக கூறிய அன்மேஷ் குமார் என்பவர் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
அன்மேஷ் குமார் சின்கா கூறுகையில், "இந்திய ரயில்வே 168 ஆண்டுகள் பழமையானது. அவ்வப்போது ரயில்வே பெட்டிகள், என்ஜின், பிரேக் சிஸ்டம் ஆகியவற்றிலும் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல ரயில்வே சங்கிலியை பிடித்து இழுக்கும் போது எந்த பெட்டி என்பதை கண்டுபிடிப்பதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது ரயில்களில் வேக்கம் பிரேக்குகள் கோச்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பிளாஷ் லைட் எரியும்: இதில், மேல்புற கார்னரில் ஒரு வால்வு இருக்கும். பயணி யாரேனும் ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால் உடனடியாக அந்த வால்வு சுற்ற தொடங்கும். இந்த வால்வு உடனடியாக ரயிலின் டிரைவர் அல்லது உதவி ஓட்டுநருக்கு எந்த பெட்டியில் இருந்து செயின் இழுக்கப்பட்டுள்ளது என அலார்ட் செய்யும். அதேபோல் பெட்டிகளில் எமெர்ஜென்சி பிளாஷ் லைட் இருக்கும்.
செயினை பிடித்து இழுத்தால் அந்த பிளாஷ் லைட் எரிய தொடங்கும். செயினை ரயில்வே அதிகாரிகள் வந்து ரீசெட் செய்யும் வரை அந்த லைட் எரிந்து கொண்டே இருக்கும். இது எந்த பெட்டியில் இந்த பிளாஷ் லைட் எரிந்துகொண்டு இருக்கிறதோ அதை வைத்து அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications