ஆதார் + ரேஷன் + ஆன்லைன் அப்டேட்.. விடுபட்ட பெயரை சேர்க்கணுமா.. 2 நிமிஷம்தான்.. ஈஸியா முடிச்சிடலாம்
சென்னை: அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர பலன்களை பெற வேண்டுமானால், டிஜிட்டல் அடையாள சான்றாக பயன்படும் ஆவணங்கள்தான் ரேஷன் கார்டும், ஆதார் கார்டும். இந்த அடையாள அட்டைகளை எப்படி அப்டேட் செய்வது தெரியுமா?

ரேஷன் கார்டுகள் தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.. தமிழக அரசின் திட்டங்களை பெறவும், பொதுவிநியோக கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை பெறவும் ரேஷன் அட்டை முக்கியமானதாகும்.
ரேஷன் கார்டுகள்: பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் தொடர்ந்து நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் அட்டை இது என்பதால், மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
அதேபோல, ஆதார் கார்டும் தற்போது அத்தியாவசியமாகிவிட்டது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும்.
ஆதார் கார்டுகள்: இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆக, ரேஷன் கார்டும்சரி, ஆதார் கார்டும் சரி, இரண்டுமே மிக மிக முக்கிய ஆவணங்களாகவும், அடையாளமாகவும் திகழ்கின்றன.
அதனால்தான், ஆதார் கார்டையும், ரேஷன் கார்டையும் அடிக்கடி அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.. UIDAI அமைப்பு ஆதாரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் புதுப்பித்து கொள்ளும் வசதியும் உள்ளது.. ஆதாரை புதுப்பிக்கும்போது, அதற்கான உரிய ஆவணத்தையும் சரியாக சமர்ப்பிக்க வேண்டும்...
அதேபோல, ரேஷன் கார்டில், உங்கள் வீட்டு நபர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால், அந்த பெயர்களை எளிதாக சேர்த்து கொள்ளலாம். இதற்கும் ஆன்லைனிலேயே வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆதார் கார்டை ஆன்லைனில் எப்படி புதுப்பிப்பது தெரியுமா?
- uidai.gov.in.என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, ஆதார் அப்டேட் படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்
- இந்த படிவத்தை, பிழையில்லாமல் துல்லியமாக பூர்த்தி செய்து அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
- பிறகு, ஆதார் சேவை மைய அதிகாரிகள், பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்த்து, விவரங்களை அப்டேட் செய்வார்கள். இதற்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
- இப்போது உங்களுக்கு மையத்திலிருந்து ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.. அதனை வைத்து உங்களின் அப்டேட் விவரங்களை கண்காணிக்கலாம்.
ரேஷன் கார்டில், பெயர்களை எப்படி சேர்ப்பது தெரியுமா?
- இதற்கு https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- இபபோது உள்நுழைவு ஐடியை உருவாக்க வேண்டும்.. ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே ஐடி இருந்தால், அதை வைத்து உள்ளே நுழைய வேண்டும்
- பிறகு புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கான விருப்பத்தை காண்பீர்கள்.. இதை கிளிக் செய்தால், ஒரு புதிய படிவம் திறக்கும்
- உங்கள் குடும்பத்தில் புதிய நபர்களை பற்றிய முழுமையான தகவலை அதில், பிழையில்லாமல் நிரப்ப வேண்டும்
- அனைத்து ஆவணங்களும் படிவத்தில் இணைத்து, சமர்ப்பித்தால், உங்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும்
- இப்போது அந்த வெப்சைட்டில் படிவத்தை நேரடியாகவே கண்காணிக்கலாம்
- படிவத்தின் விண்ணப்பத்திற்கு பிறகு அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, கடைசியாக, ஒப்புதல் வழங்கப்பட்டு, பெயரும் இணைக்கப்பட்டுவிடும்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications