ரேஷன் அட்டைதாரர்களே.. மிஸ்ஸாயிடுச்சா கார்டு.. கவலையே வேணாம்.. 5 நிமிஷம் இதை பண்ணுங்க.. ஈஸியோ ஈஸி
சென்னை: ரேஷன் அட்டையை பெறுவதற்கு ஆன்லைனிலேயே வழி உள்ளதுபோல, ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமானாலும் சரி, உங்கள் ரேஷன் கார்டு தொலைந்தே போனாலும்சரி, அதை திரும்ப பெறவும் ஆன்லைனிலேயே வழி உண்டு.
வீட்டு முகவரி ஆவணமாக பல இடங்களில் ரேஷன் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.. பொதுமக்களின் வசதிக்காகத்தான், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தி உள்ளது.

ஆன்லைன்: அதேபோல ஆன்லைனிலேயே புதிய ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பித்து கொள்ளலாம்.. அப்படி விண்ணப்பிக்கும் முன்பு, பழைய ரேஷன் கார்டில் இருந்து உங்களின் பெயரை நீக்க வேண்டும்.
அப்படி நீக்க வேண்டுமானால், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் தெரியுமா? ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் போன்றவை இருந்தால் போதும்.. ஈஸியாக ஆன்லைனிலேயே திருத்தங்களை செய்து கொள்ளலாம்.
எப்போதுமே, ரேஷன் கார்டுகளில், வீட்டு அட்ரஸ், வயது விவரம், எழுத்துப்பிழை இல்லாமல் பெயர், பெயரை சேர்த்தல் அல்லது நீக்குதல் என்று எல்லாவிதமான அப்டேட்டுக்களையும் தெளிவாக செய்திருக்க வேண்டும்.
அதிலும் புதியதாக திருமணம் ஆனவர்கள் புதிய குடும்ப உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும்.. முக்கியமாக, வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.
புதிய உறுப்பினர்: அதாவது, திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும். அல்லது தனி கார்டாக கணவன், மனைவி இருவரும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தால், ஏற்கனவே உங்கள் பெயர் வீட்டு ரேஷன் கார்டில் உள்ள உங்களது பெயரை நீக்கிய பிறகே, புதிய கார்டில் உங்கள் பெயரை சேர்க்க முடியும். இதையும் ஆன்லைனில் செய்து முடிக்கலாம். அல்லது பக்கத்திலுள்ள இ-ஆதார் அலுவலகம் சென்று அப்டேட் செய்யலாம்.
இணையதளம்: https://tnpds.gov.in/ என்ற இந்த தமிழக உணவு வழங்கல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குள் சென்றால், ரேஷன் கார்டு மாற்றங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து சேவைகளும் இருக்கும்.. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் (1967 அல்லது 1800-425-5901) என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல, சில சமயம், ரேஷன் அட்டையை நாம் தெரியாமல் தொலைத்துவிட நேரிடும்.. அப்படி தொலைந்துவிட்டால், கவலையே தேவையில்லை.. ஆன்லைனிலேயே தவறவிட்டதை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.. இதற்கு என்ன வழிகள் தெரியுமா?
- முதலில் https://www.tnpds.gov.in/ என்கிற லிங்க்கை ஓபன் செய்யவும். அதன்பின் இதில் உங்கள் பயனாளர் ஐடியை உள்ளிட வேண்டும்.
- பிறகு, பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு ஓடிபி ஒன்று வரும். அதை ஸ்கிரீனில் பதிவு செய்து, சுயவிவர பக்கத்திற்கு லாகின் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக, டிஎன்பிடிஎஸ் ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் தென்படும்.
- அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து, அந்த காப்பியை PDF வடிவில் டவுண்லோட் செய்துக்கொள்ள வேண்டும்.
- இந்த காப்பியை பிரிண்ட்அவுட் எடுத்து, உங்கள் ரேஷன் கார்டுக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று நகலை சமர்ப்பித்தால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இதற்கு 2 முதல் 3 மாத காலம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பான ஏதேனும் கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications