பான் கார்டு வெச்சிருக்கீங்களா? 2 இருக்கா? அப்ப ரூ.10,000 ரெடியா வைங்க.. தொலைந்த அட்டையை மீட்பது ஈஸி
சென்னை: உங்களிடம் பான் கார்டு இருக்கிறதா? தொலைந்துவிட்டதா? தொலைந்த பான் கார்டினை எப்படி மீட்பது தெரியுமா? பிழைகள் இருந்தால் அதை எப்படி திருத்தம் செய்வது தெரியுமா?
இன்றைய சூழலில், பான் கார்டுகள் நம் ஒவ்வொருக்கும் அவசியமாக தேவைப்படுகிறது.. ரேஷன் கார்டுகளை போலவே, வாக்காளர் அடையாள அட்டையை போலவே, மிக முக்கியமான ஆவணமாகவும் பார்க்கப்படுகிறது.
முக்கியத்துவம்: இவ்வளவு முக்கியம் வாய்ந்த பான் அட்டைகளை, வருமான வரித்துறை நமக்கு வழங்குகிறது.. நிதி பரிவர்த்தனைகளுக்கு பெரும்பாலும் இந்த பான் கார்டுகளே நமக்கு கை கொடுத்து உதவுகின்றன. வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்றாலும்கூட, இந்த பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. சொத்தை வாங்கி விற்க வேண்டுமானாலும், இந்த பான் கார்டுகளே அவசியமாகிறது.

இந்த பான் கார்டுகளை ஆன்லைனில் பெறக்கூடிய வசதிகள் உள்ளன.. இந்த கார்டுகளில் ஏதாவது திருத்தம் என்றாலும், அதையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் வசதி: அந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்த பான் கார்டுகள் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.. ஒருவேளை பான் கார்டு தொலைந்து விட்டால், இதற்கும் ஆன்லைனில் வசதிகள் உள்ளன. கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தி, மீட்டுக் கொள்ளலாம்.
- https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
- தரப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, "ரீபிரிண்டட் பான்" அட்டைக்கு பதிவு செய்ய வேண்டும்
அவ்வளவுதான், நிரந்தர முகவரிக்கு அஞ்சல் மூலமாக உங்களுக்கு பான் கார்டு அனுப்பப்பட்டுவிடும.
பான் கார்டுகள்: அதேபோல, ஒரே ஒரு பான்கார்டு மட்டுமே நாம் வைத்திருக்க வேண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருந்தால், வருமான வரித்துறை உங்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுத்துவிடும்.. அத்துடன், 10,000 ரூபாய் வரை அபராதமும் விதித்துவிடும்.. எனவே, ஒன்றுக்கு மேல் கார்டுகள் இருந்தால், ஒப்படைத்துவிட வேண்டும். அதை எப்படி ஒப்படைப்பது தெரியுமா?
இதையும் ஆன்லைனிலேயே சரண்டர் செய்து விடலாம். இதற்கு PAN மாற்றம் கோரிக்கை விண்ணப்ப படிவத்தை முதலில் நிரப்ப வேண்டும். அதன்மேல், நீங்கள் பயன்படுத்தும் PAN எண்ணை பதிவிட வேண்டும்.. ITEM NO: 11ல், இரண்டாவது பான் எண்ணின் விவரங்களை தரவேண்டும். அதன் நகலையும் இணைத்து, NSDL சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
பிழைகள்: அதேபோல, உங்கள் பான் கார்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் NSDLன் அதிகாரப்பூர்வ போர்டலுக்கு சென்று திருத்தி கொள்ளலாம். இந்த இணையதளத்தில், உங்களது தகவல்களை நிரப்பி பதிவு செய்ய வேண்டும். பிறகு, டோக்கன் எண் மற்றும் இணைப்பு உங்களது மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும்.
இதற்கு பிறகு, உங்களது மெயில் ஐடிக்கு வரும் அந்த லிங்கை கிளிக் செய்து பான் கார்டு புதுப்பிப்பதற்கான பக்கத்தை திறந்து, அதில் உங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இப்போது அதில் கேட்கப்படும் ஆவணங்களையும் பதிவு செய்து பணம் செலுத்தும் செயல்முறையை தொடர வேண்டும்.
இந்த முழு செயல்முறையையும் முடித்த பிறகு தபால் மூலமாக தேவையான தகவல்களையும் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு, புதிய பான் கார்டுகள் உங்களது முகவரிக்கு அனுப்பப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications