டிக்கெட் மட்டுமில்லை! ரயிலை மொத்தமாக அப்படியே புக் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
சென்னை:ரயில்களில் சீட் புக்கிங் செய்வது போலவே, ஒரு மொத்த பெட்டி அல்லது, முழு ரயிலையே கூட புக் செய்ய முடியுமாம். ஆன்லைனிலேயே இதற்கான ஆப்ஷன்களும் உள்ளன. ஒரு ரயிலையே புக் செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ரயில் போன்ற பொது போக்குவரத்து பயன்பாடு அதிகமாக உள்ளது. அதிலும் உலக மக்கள் தொகை நாடாகவும் இருக்கும் இந்தியாவில், ரயில் போக்குவரத்துதான் பயணிகளின் உயிர் மூச்சாக உள்ளது. தொலை தூர பயணங்கள் என்றாலும், குறுகிய தொலைவு பயணம் என்றாலும் ரயில்கள் பயணிக்கவே பயணிகள் விரும்புகிறார்கள்.

ரயில்கள் டிக்கெட் இல்லை என்றால் மட்டுமே பேருந்தில் போவதை பற்றி யோசிப்பார்கள். சில பயணிகள் பயணத்தையே கூட ரத்து செய்து விடுவதையும் கூட பார்க்க முடிகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு பயணிகள் ஆன்லைனிலும் நேரிலும் புக் செய்து கொள்ளலாம். சில நேரங்களில் சுற்றுலா பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியையும் ஏன் சில நேரங்களில் முழு ரயிலையே கூட புக் செய்து கொள்வதை பார்க்க முடிகிறது. இப்படி முழு ரயிலை புக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
50 ஆயிரம் டெபாசிட்
ரயில்களில் தனி கோச்களையும் மொத்த ரயிலையும் கூட புக் செய்து கொள்ளும் ஆப்ஷன்கள் இருக்கின்றன. இப்படி புக் செய்ய வேண்டும் என்றால் 6 மாதத்திற்கு முன்பே புக்கிங்கை தொடங்கி ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நாட்களுக்கு முன்பாக முடித்து விட வேண்டும். ரூ.50 ஆயிரம் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.
24 கோச்கள் கொண்ட ரயில்களுக்கு...
(https://www.ftr.irctc.co.in): என்ற ஐஆர்சிசிடி போர்ட்டல் மூலமாக உங்களின் கோரிக்கையை வைக்க வேண்டும். கோச், ரயில் உள்ளிட்டவற்றை செலக்ட் செய்து ஒடிபியுடன் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். செல்ல வேண்டிய இடம், புறப்படும் இடம் ஆகியவற்றை அதில் குறிப்பிட வேண்டும் . பயணிகளின் விவரங்களை அளித்துவிட்டு, டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும்.
விவரங்களை கொடுக்க வேண்டும்
ஆப்லைனில் என்றால், நேரடியாக ரயில் நிலையங்களுக்கு சென்று தலைமை ரிஷர்வேஷன் அலுவலர் அல்லது ஸ்டேஷன் மாஸ்டரை அணுக வேண்டும். ரயில் குறைந்தது 10 நிமிடங்கள் நிற்கும் ரயில் நிலைய மேலாளர்களை மட்டுமே அணுகலாம். ரயில் நிலைய மேலாளரிடம் எதற்காக ரயில் வேண்டும் என்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
அதாவது திருமணமா? அல்லது யாத்ரீக பயணமா, சுற்றுலாவா? உள்ளிட்ட விவரங்களை புக்கிங்கின் போது பயணிகள் அளிக்க வேண்டும். எனினும், பெரும்பாலும் தனி கோச்கள் அடிக்கடி ஆன்மீக பயணம் செய்பவர்கள் புக் செய்து பயணிப்பதை பார்க்க முடிகிறது. இதற்கான கட்டணத்தை ரயில் செல்லும் வழித்தடம் எத்தனை நாட்கள் பயணம் என்பதை பொறுத்து மாறுபடும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications