இன்னிக்கு சண்டே! மாட்டு கறி வாங்க போறீங்களா! மாட்டின் இந்த பகுதியை மட்டும் வாங்கவே வேண்டாம் ப்ளீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோழிக்கறி, மட்டன், மாட்டுக் கறி, பன்றிக் கறி எப்படி வாங்குவது எப்படி தெரியுமா?

இதுகுறித்து Film Food Fun & Fact எனும் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை...

மார்க்கெட் கிளம்பிட்டீங்களா? மீன் எப்படி வாங்குவது என்று ஏற்கனவே பதிவிட்டிருந்தோம். இப்போ கறி எப்படி வாங்கலாம் என்று பார்ப்போம்.

Do you know how to buy Chicken, Mutton and Beef?

கோழிக்கறி

பிராய்லர் கோழியாக இருந்தால் பேக் சைடு மட்டும் வாங்கவும் அதுதான் கறி சாப்ட் ஆக இருக்கும். ரொம்ப வெள்ளையாகவும் இல்லாமல் ரொம்ப சிகப்பாகவும் இல்லாமல் இளம் சிவப்பு கறி வாங்கவும். பொதுவாக எல்லோரும் தோல் உரித்து வாங்குவார்கள் அது நல்லது தான் ஆனா குழம்பு டேஸ்டாக இருக்காது. கொஞ்சம் தோலுடன் இருப்பது நல்லது தான். பிராய்லர் கோழியை விட பண்ணை நாட்டு கோழி பெஸ்ட் கிலோ 240 ரூபாய் தான்.

Do you know how to buy Chicken, Mutton and Beef?

மட்டன்

வெள்ளாட்டுக் கறிதான் பெஸ்ட். அதில் நெஞ்சு பகுதி மற்றும் முன்தொடை நன்றாக சாஃப்ட்டாக இருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் பின்தொடை கறி வாங்க வேண்டாம். குடல் வாங்கினால் அதனை தனியாக செய்யவும் அதனுடன் மற்ற PARTS சேர்க்க வேண்டாம்.

Do you know how to buy Chicken, Mutton and Beef?

மாட்டுக்கறி

மாட்டுக்கறி எப்போ வாங்கினாலும் கழுத்துப் பகுதி ( Boneless) என்று கேட்டு வாங்குங்கள். RUMP PART கறி கிடைத்தால் ரொம்ப அல்லது ஆனால் முன்கூட்டியே சொல்லி வைக்க வேண்டும். இதன் எந்த தொடைப்பகுதியும் வாங்க வேண்டாம்.

Do you know how to buy Chicken, Mutton and Beef?

பன்றிக் கறி

பன்றி கறி வாங்கும் போது கறி மட்டும் வாங்காமல் வார் 60% கறி 40% இருக்குமாறு கலந்து வாங்கவும். BELLY பார்ட் மிகவும் நன்றாக இருக்கும். கேட்டு வாங்கவும். இவ்வாறு அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கறி கடைகளில் கூட்டம் அலைமோதும். சிலருக்கு கறி எப்படி வாங்க வேண்டும் என்பது தெரிந்திருக்கும். சிலருக்கு தெரியாது. இதனால் தெரியாதவர்களுக்கு நன்றாக இல்லாத கறியை கொடுத்து சில கடைக்காரர்களும் ஏமாற்றிவிடுவார்கள்.

முற்றிய கறியை சாப்பிட்டால் வயிறு வலிக்கும். வாந்தி வரும். அது போல் அதிக கொழுப்பு கலந்த கறியை சாப்பிட்டாலும் ஜீரணமாவதில் பிரச்சினை எழும். சிலருக்கு பன்றிக் கறியையும் மாட்டுக் கறியையும் சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால் எப்படி வாங்குவது என தெரியாமல் ஏனோ தானோ என கடையில் கொடுப்பதை வாங்கிக் கொள்வார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த ட்வீட் பயனுள்ளதாக அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+