தர்பூசணி வாங்க போறீங்களா? சுவையான டேஸ்ட்டான பழத்தை வாங்க இந்தாங்க டிப்ஸ் !
சென்னை: கோடை காலம் தொடங்கிவிட்டது, ஆங்காங்கே தர்பூசணி கடைகள் முளைத்துவிட்டன. இந்த பழங்களில் சுவையானதை எப்படி தேர்வு செய்ய வேண்டும் தெரியுமா?
seasonal fruits என சொல்லப்படும் தர்பூசணி கோடை காலத்தில்தான் காய்க்கும், விற்பனைக்கும் வரும். இது நீர் காய் என்பதால் கோடை வெயிலுக்கு ஏற்றது. இதை பலர் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த தர்பூசணியை சாப்பிடும் போதே தண்ணீரும் சேர்ந்து இருப்பதால் சுவை நன்றாக இருக்கும். கோடை வெயிலுக்கு தேவையான நீர் சத்தும் நம் உடலுக்கு போய் சேரும். சிலர் காலையில் சிற்றுண்டிக்கு பதிலாக கூட இந்த பழத்தை சாப்பிடுவர்.
மேலும் 11 மணிக்கு ஸ்னாக்ஸுக்கு பதில் இந்த பழத்தை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும். 95 சதவீத நீர் சத்து இந்த பழத்தில் உள்ளதால் உடலில் நீர் சத்து குறையாமல் தற்காத்துக் கொள்ளவும் முடியும். எல்லாம் சரி, இந்த பழத்தை தூக்க முடியாமல் தூக்கி வந்து வாங்கி, வீட்டில் வைத்து ஆசை ஆசையாக கட் செய்கிறோம்.
பிறகு எடுத்து சாப்பிட்டால் அந்த பழம் காயாக இருக்கும். இல்லாவிட்டால் ருசியே இல்லாமல் சல்லுனு இருக்கும். தர்பூசணி பழம் சுவையாகவும் இனிப்பாகவும் இருக்க ஒரு டிப்ஸ் இருக்கிறது. அதாவது தர்பூசணி பழத்தை வாங்கும் போது இந்த டிப்ஸை கடைப்பிடித்தால் வீட்டில் ஏமாற்றம் மிஞ்சாது.
பழத்தின் கோடுகளை வைத்து தர்பூசணி பழத்தை வாங்கலாம். அதாவது பழத்தின் மேல் பச்சை நிறத்திலும் பழுப்பு நிறத்திலும் கோடுகள் இருக்கும். அதில் பச்சை நிற கோடுகள் டார்க்காக இருக்கும். பழுப்பு நிற கோடுகள் மங்கிய அளவில் இருக்கும். அப்படியிருந்தால் அது பழுத்த பழம். அதுவே பச்சை நிறக்கோடுகள் மங்கியும் பளபளப்பாகவும் தெரிந்தால் அது பழுக்கும் நிலையில் உள்ள பழம் என்பது அர்த்தம்.
பழத்தை நன்றாக பார்த்தால் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கோடுகள் அழிந்திருக்கும். அவ்வாறு இருந்தால் மண்ணிலிருந்து பறித்த போதே அவை பழுத்துவிட்டதாக அர்த்தம். அதுவே கொஞ்சம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் கலந்தது போல் இருந்தால் நன்கு இனிப்பு சுவை கொண்ட பழுத்த பழம் என அர்த்தம்.
ஒரு வேளை வெள்ளை நிறத்திலோ அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பழம் சுவையாகவே இருக்காது என்று அர்த்தம். அது போல் தர்பூசணி பழத்தின் காம்பு காய்ந்து பிரவுன் நிறத்தில் இருந்தால் பழம் பழுத்திருப்பதாக அர்த்தம். அதே வேளை பச்சை நிறத்தில் காம்பு இருந்தால் பழம் காயாகவே உள்ளது என புரிந்து கொள்ளலாம்.
பழத்தை சிலர் தட்டி பார்த்தும் வாங்குவார்கள். தட்டும் போது லேசாக இருந்தால் அது பழுத்த பழம் என்பது அர்த்தம். இதே சப்தம் கேட்கும் போது அது பழுக்காதது. அது போல் பழத்தின் மீது ஆங்காங்கே வெட்டுக் காயங்கள் இருந்தால் பழம் இனிப்பு சுவையுடன் இருக்கிறது என்று அர்த்தம். தர்பூசணி பழங்கள் வட்டமாக இருப்பதை மட்டும் வாங்குங்கள், முட்டை போல் இருந்தால் அதில் சுவை இருக்காது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications