Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை அட்டை... ரேஷன் கார்டு உங்க கையில் இருக்கா? முகவரி மாற்றம் செய்யணுமா? ஆன்லைனில் வழியிருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்வது உட்பட ரேஷன் கார்டுகளை புதிய முகவரிக்கு மாற்றம் செய்வது எப்படி தெரியுமா? ரொம்ப சிம்பிள்.

ஒருவரிடம் ரேஷன் கார்டுகள், இருந்தால் மட்டுமே, அரசின் சலுகைகளை அவரால் பெற முடியும்.. 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதன் மூலம் பல நன்மைகளை மக்கள் பெற்று வருகிறார்கள்.

Do you know How to change your New Address in Ration Card online in Tamil Nadu

புதிய கார்டுகள்: புதிய ரேஷன் அட்டைகளை அனைவராலும் பெற்றுவிட முடியாது. புதிதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள், புதிய கார்டுகளை வாங்கி கொள்ள முடியும். இதற்கு முதலில், உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டிலிருக்கும் பெயரை நீக்க வேண்டும். அதேபோல, மனைவியின் பெயரை அவர்களது ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும்.

இதற்காக திருமண பதிவு சான்றிதழ் உட்பட சில ஆவணங்களை தந்து, ஆன்லைன் மூலமே நீக்கிக்கொள்ள முடியும். பிறகு, புதிய ரேஷன் கார்டுக்கு தேவையான ஆவணங்களை சரியாக சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப தலைவரின் போட்டோ, இப்போதைய ரேஷன் கார்டு அல்லது பெயர் சேர்த்தல் நீக்குதல் கார்டு, வீட்டு வரி ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம், கேஸ் இணைப்பு போன்றவற்றை இணைக்க வேண்டும்.

ஆன்லைன்: அதேபோல, உங்களது ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால், அதையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு ஊர் மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமானாலும், அதையும் ஆன்லைனில் செய்து கொள்ளலாம்..

இதற்கான கட்டணம் ரூ.20 மற்றும் தபால் சேவை கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் 45 ரூபாயை இணைய வழியில் கியூ.ஆர். கோடு அல்லது நெட் பாங்கிங் வழியாக செலுத்தினாலே போதும்.. புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


முகவரி மாற்றம்: நீங்கள் ரேஷன் கார்டு முகவரியை மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கீழ்க்கண்ட வழிமுறைகளை ஆன்லைனிலேயே பின்பற்றி, அட்ரஸை எளிதாக மாற்றலாம்.

- https://tnpds.gov.in/login.xhtml என்ற வெப்சைட்டிற்குள் செல்ல வேண்டும்.

- "முகவரி மாற்றம்" என்ற ஆப்ஷனுக்குள் சென்று, ரேஷன் கார்டில் பதிவு செய்த மொபைல் எண் மற்றும் கேப்சா எண்ணை பதிவிட வேண்டும்.

- இப்போது செல்போனுக்கு வந்திருக்கும் ஓடிபி-யை டைப் செய்தால், ஸ்கிரீனில் முகவரி தோன்றும்.

- அதில் உங்கள் வீட்டு எண், உங்கள் தெரு பெயர், உங்கள் ஊர், எந்த தாலுகா, எந்த மாவட்டம் என்பதை தவறில்லாமல் பதிவிட வேண்டும்.

- பிறகு உங்களிடமுள்ள மின்சார பில், குடிநீர் கட்டண பில், சிலிண்டர் பில், போன் பில், குடியிருப்புக்கான சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக "பதிவேற்று" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- "இணைக்கப்பட்டுள்ள ஆவணம் பதிவேற்றப்பட்டுள்ளது" என்ற திரையில் தோன்றியதுமே, அதை நீங்கள் ஒரு முறை செக் செய்துவிட்டு, "உறுதிப்படுத்து" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்..

- உங்கள் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் கோரிக்கை 2 அல்லது 3 வாரங்களில் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+