சர்க்கரை அட்டை... ரேஷன் கார்டில் உங்க போன் நம்பர் இருக்கா? புது மொபைல் எண் சேர்க்கணுமா? ரொம்ப ஈஸி
சென்னை: ரேஷன் கார்டில் எந்தவித திருத்தங்களையும் எளிதாக மேற்கொள்ளலாம்.. அந்தவகையில், உங்களது மொபைல் நம்பர் மாறிவிட்டாலும், அந்த புதிய செல்போன் நம்பரையும் ரேஷன் கார்டில் சேர்க்கலாம். அதுவும் ஆன்லைனிலேயே...!!
ரேஷன் கார்டுகள் அனைவருக்குமே தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. இந்த கார்டு இருந்தால் மட்டுமே, அரசின் சலுகைகளை நம்மால் பெற முடியும்.. 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதன் மூலம் பல நன்மைகளை மக்கள் பெற்று வருகிறார்கள்.

ரேஷன் கார்டுகள்: ரேஷன் கார்டுகளில் உங்களது பெயர் சேர்க்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்றால், ஆன்லைனிலேயே இதற்கு வசதி உள்ளது.. இதற்கு வீட்டு வரி ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம், கேஸ் இணைப்பு உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.
அதேபோல, உங்களது ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால், அதையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு ஊர் மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமானாலும், அதையும் ஆன்லைனில் செய்து கொள்ளலாம்..
தபால் சேவை: இதற்கான கட்டணம் ரூ.20 மற்றும் தபால் சேவை கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் 45 ரூபாயை இணைய வழியில் கியூ.ஆர். கோடு அல்லது நெட் பாங்கிங் வழியாக செலுத்தில், புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் கிடைத்துவிடும்.
அதேபோல, புதிய ரேஷன் கார்டுகள், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைத்துவிடாது.. புதிதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள், புதிய கார்டுகளை வாங்கி கொள்ள முடியும். அப்படி விண்ணப்பிக்கும்போது, முகவரி, பெயர், வயது மற்றும் செல்போன் நம்பர் போன்ற தகவல்கள் விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்படுகின்றன. இதில், ஒரு சில காரணங்களால், பொதுமக்களுக்கு மொபைல் நம்பர் மாறக்கூடும்.
ரேஷன் அட்டைகள்: அப்படி மொபைல் எண் மாறினால், புதிய நம்பரை ரேஷன் அட்டையில் அப்டேட் செய்வது அவசியமாகும். காரணம், செல்போன் மூலமாகத்தான், ரேஷன் கார்டு தொடர்பான எல்லா தகவல்களும் மெசேஜ் மூலம் அனுப்பப்படுகின்றன.
எனவே, புதிய போன் நம்பரை, ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். இதற்கென ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனித்தனியாக வெப்ட்சைகள் உள்ளன.. நம்முடைய தமிழகத்துக்கும், அரசின் அதிகாரப்பூர்வ உணவுத்துறை போர்ட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த வெப்சைட்டில், கீழ்க்கண்ட வழிகளை பயன்படுத்தி, ரேஷன் கார்டில் உங்களது புதிய செல்போன் நம்பரை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்.
- https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx. என்ற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
- அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை புதுப்பிக்க Your Registered Mobile Number என்று எழுதப்பட்டிருக்கும்
- அதன்கீழே கேட்கப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும். (வீட்டுத்தலைவரின் ஆதார் எண் / என்.எஃப்.எஸ் ஐடி (Aadhar Number of Head of Household/NFS ID) போன்ற விபரங்களை எழுத வேண்டும்.
- அதற்கு அடுத்த வரிசையில், ரேஷன் கார்டு எண்ணை (Ration card No) பதிவிட வேண்டும்.
- அடுத்த வரிசையில், வீட்டின் தலைவரின் பெயர் (Name of Head of HouseHold) பதிவிட வேண்டும்
- கடைசியாக உள்ள வரிசையில் உங்களது புதிய மொபைல் எண்ணை எழுத வேண்டும்.
- இப்போது Save என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது புதிய மொபைல் நம்பர் புதுப்பிக்கப்படும்.
ஆக, "Aadhar Number of Head of Household / NFS ID, "Ration card No", "Name of Head of HouseHold", "New Mobile Number" போன்ற தகவல்களை பிழையின்றி பூர்த்தி செய்துவிட்டு, கடைசியாக Save என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட்












Click it and Unblock the Notifications