முடிஞ்சது டைம்.. ஆதார் கார்டு + பான் கார்டு லிங்க்.. ஆமா, ஆதார் இணைப்பை சரிபார்ப்பது எப்படி தெரியுமா
சென்னை: பான் கார்டையும் ஆதார் அட்டையையும் இணைக்க நேற்றே கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்த நிலையில், அதற்கான காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டது. இதுவரை எந்த அறிவிப்பும் கால நீட்டிப்பு குறித்து வெளியாகவில்லை.
நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன..
காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இப்படி இணைப்பதற்கு, நிறைய காலக்கெடு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் இந்த இணைப்பு குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், பலரும் இதை செய்யவில்லை... அதனால்தான், ஜூன் 30ம் தேதி வரை மறுபடியும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.. இப்படி கால அவகாசம் நீட்டிக்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும்.

அபராதம்: இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஆதார், பான் கார்டை இணைப்பவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடியே, இதற்கு மேல் கால அவகாசம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நேற்றுடன் கெடுவும் முடிந்துவிட்டது.
நேற்றைய தினம் ஆதார் - பான் இணைக்காதவர்களுக்கு இன்று முதல் பான் கார்டு, செயலிழந்துவிடும். இன்று முதல் சம்பந்தப்பட்ட நபரால் பரிவர்த்தனைகளின்போதும், வருமான வரி சார்ந்த விஷயங்களிலும் பான் எண்ணை குறிப்பிட முடியாது.
ஆதார் - பான் இணைக்காவிட்டால் என்னாகும்:
- அதுமட்டுமல்ல, வருமான வரித்தாக்கல் செய்ய முடியாது.
- நிலுவையில் உள்ள வருமான வரி படிவங்கள் செயல்படுத்தப்படாது.
- நிலுவையில் உள்ள வருமான வரி ரீஃபண்ட் தொகை வராது.
- பான் செயலிழந்துவிட்டால் அதிக டிடிஎஸ் (TDS) வரி வசூலிக்கப்படும்.
வெப்சைட்: அதேபோல, பான் கார்டு பயன்படுத்தும் பலரும், தங்களது பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டோமா? இல்லையா? என்ற சந்தேகம் எழுவது இயல்பு.. இப்படி சந்தேகம் இருந்தால், நாமே நேரடியாக கிளியர் செய்து கொள்ளலாம்.
வருமான வரித்தளத்திற்கு சென்று Profile Settings என்பதை கிளிக் செய்து, Pfofile settingsல் Link aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.. அப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது என்று வரும். இதன் மூலம் பயனாளிகள் தங்கள் நிலையை அறிந்து கொள்ளலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications