உங்கள் கணவரோ மனைவியோ எங்கே போறார் வருகிறார் என தெரிய வேண்டுமா? பாதுகாப்புக்காக கண்காணிப்பது சிம்பிள்
சென்னை: உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களை மொபைல் மூலம் கண்காணிப்பது எப்படி என்பது தெரியுமா? அது போல் உங்களை யாராவது கண்காணிக்கிறார்களா என்பதையும் தெரிந்து அதை தடுத்து நிறுத்துவதும் எளிது!
இதுகுறித்து டாப் இன்ஃபார்மர் எனும் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கூகுள் மேப்பில் இது என் வீடு, இது என் கோட்டை, இது என் வசந்த மாளிகை என நீங்கள் உலகில் எந்த மூலையில் இருந்து போட்டாலும், உங்கள் வீட்டு முகவரி வர மாதிரி எப்படி எளிதாக செட் செய்வது என்பதை பார்க்கலாம்.

அது போல் உங்களுக்கு தெரிந்த நண்பர் எங்கிருக்கிறார் என்பதையும் உங்களிடம் உள்ள மொபைல் போன் மூலம் கண்டறியலாம். இது என் வீடு, இது என் வசந்த மாளிகை, இது என் கோட்டை என உங்களுக்கு பிடித்த பெயரை கூகுள் மேப்பில் போட்டதும் உங்கள் வீட்டு முகவரியை காட்டுவது போல் எப்படி செட் செய்யலாம் தெரியுமா.
இதற்கு முதலில் நீங்கள் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் போதே உங்கள் போனை எடுத்து கூகுள் மேப்ஸை ஓபன் செய்து விடுங்கள். அந்த கூகுள் மேப்பில் நடுபகுதிக்கு கீழ் வலது பக்கமாக பார்த்தீர்களேயானால் நீல நிற புள்ளி இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.
இதை தொட்டதும் அந்த ப்ளூ கலர் புள்ளி எங்கே இருந்தாலும் தற்போது நீங்கள் இருக்கும் current location க்கு வந்துவிடும். அந்த நீல நிற புள்ளி சரியாக உங்கள் வீட்டிற்கு மேல் வந்ததும் கீழே இடது பகுதியில் Explore என இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அதை தொட்டவுடன் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களை எல்லாம் காட்டும்.
ஒரு வேளை நீங்கள் வெளியூரில் இருந்தால் உங்களுக்கு அருகே என்னென்ன சுற்றுதா தலங்கள் இருக்கின்றன என்பதை கண்டறியலாம். இந்த ஆப்ஷன் நமக்கு தேவையில்லை. Contribute என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் add place என்பதை கிளிக் செய்யவும். அதில் place name என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்த பெயரை டைப் செய்து வைங்க!
categoryயை செலக்ட் செய்து கொள்ள வேண்டும். address என்ற இடத்தில் கஷ்டப்பட்டு அட்ரஸ்ஸை டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக பக்கத்தில் இருக்கும் கருப்பு நிற புள்ளியை தொட்டாலே போதும். அது போல் சிலர் தங்கள் கடை எங்கே இருக்கிறது என்பது குறித்து கூகுள் மேப்பில் போட விரும்பினால் location within என்ற இடத்தில் எந்த இடத்தில் கடை இருக்கிறது என டைப் செய்து கொள்ளுங்கள்.
அது போல் hours என்ற இடத்தில் உங்கள் கடை எந்தெந்த நாட்களில் எத்தனை மணிக்கு திறக்கும் என்பதையும் போட்டு விடுங்கள். மேலும் contact என்ற இடத்தில் உங்களுக்கு இணையதள முகவரி இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்தது Place photos என்ற இடத்தில் உங்கள் கடை குறித்த புகைப்படங்களை அதில் சேர்க்கலாம். பிறகு submit என்பதை கிளிக் செய்யவும்.
ஒரு ஆர்வத்தில் கூகுள் மேப்பில் போய் கடையோ அல்லது வீடோ மார்க் ஆகியிருக்கிறதா என சுற்றி சுற்றி பார்த்தாலும் கண்டிப்பாக மார்க் ஆகியிருக்காது. இதை 24 மணி நேரம் கழித்து செக் செய்தால் இருக்கும். கூகுள் மேப்பில் கடை முகவரியை கொடுத்தால் கடைக்கு ஒரு விளம்பரம் கிடைக்கும். ஆனால் உங்கள் வீட்டு முகவரியை கொடுத்தால் அதில் சில பிரச்சினைகள் வரும். உங்கள் முகவரியை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
உங்களுக்கு தெரிந்தவர்களின் லோகேஷனை உங்கள் போனில் எளிதாக பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம். நான் சொல்லும் இந்த டிப்ஸை நல்ல காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். தயவு செய்து தவறான காரியங்களுக்கு பயன்படுத்தாதீர்கள். கணவரோ, மனைவியோ தங்கள் ஜோடியின் பாதுகாப்பு கருதி எங்கெல்லாம் போகிறார்கள் என தெரிந்துகொள்ள விரும்பினால், அவர்கள் சம்மதத்தோடு போனை எடுங்கள். கூகுள் மேப் ஓபன் செய்யுங்கள். மேப் மேலே, வலது பக்கத்தில் மேப் பயன்படுத்துபவரின் மெயில் ஐடியின் முதல் எழுத்து இருக்கும்.
அதை கிளிக் செய்துவிடுங்கள். அதில் சில ஆப்ஷன்கள் வரும். அதில் Location sharing என்பதும் ஒன்று. அதை தொட்டுவிடுங்கள். அதில் Share location என்பதை கிளிக் செய்யுங்க. For 1 hour, until you turn this off என இரு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் until you turn this off என்ற ஆப்ஷனை தொட்டுவிடுங்கள். பிறகு அதை உங்கள் வாட்ஸ்அப், அல்லது மெயில் என எதற்கு வேண்டுமானாலும் அனுப்புங்கள். எப்போது தேவையோ அப்போது உங்கள் போனில் அந்த லிங்க்கை கிளிக் செய்தால் லோகேஷனை டிராக் செய்தபடியே இருக்க முடியும்.

இந்த வழிமுறையை பயன்படுத்தி உங்கள் லொகேஷனை யாராவது பார்க்கிறார்களா என்பதையும் கண்டறியலாம். location sharing என்ற ஆப்ஷனை கிளிக் செய்துவிடுங்கள். Sharing via link என்ற ஆப்ஷன் மூலமாக உங்கள் லொகேஷனை வேறு ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என தெரியும்.
ஒரு வேளை உங்கள் லொகேஷனை அவர் பார்க்கக் கூடாது என நினைத்தால் Sharing via link என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஸ்டாப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். அதேநேரம், அனுமதி பெற்றிருந்தாலும், நண்பர்களோ, காதலியோ, மனைவி அல்லது கணவனோ.. அடுத்தவர்களை அதிகம் உளவு பார்ப்பது தப்பான எண்ணங்களுக்கு வழி வகுக்கும் என்பதையும், மன நிம்மதியை கெடுக்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள் மக்களே. சந்தேகம் இருந்தால், போன வருடம் வெளியான லவ் டுடே படத்தை திரும்ப ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications