பிறப்பு சான்றிதழ்.. பிழையை திருத்த முடியுமா? ஆன்லைனிலேயே டவுன்லோடு செய்வது எப்படி தெரியுமா? ஈஸிதான்
சென்னை: பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் எளிதாக பெறுவது போலவே, பிழை இருந்தாலும் எளிதாக திருத்தி கொள்ளலாம்.. இந்த பிறப்பு சான்றிதழை எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும் தெரியுமா?
ஆதார் கார்டை போலவே, ரேஷன் கார்டை போலவே, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அரசு வழங்கும் அடையாள அட்டைகளை பெறுவது வரை, இந்த பிறப்புச் சான்றிதழ் மிகவும் முக்கியமாகும்.

இந்த சான்றிதழை மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து கொடுத்து விடுகிறது. குழந்தையின் பெயரை மட்டும் நாம் பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.. அதுவும், 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும்,
பிறப்பு இறப்பு பதிவு: அதேபோல், ஒவ்வொரு இறப்பும் 7 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் அவரவர் வாழும் நகர பஞ்சாயத்து பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய முடியும்.
சிலசமயங்களில் இந்த சான்றிதழ்கள் தவறவிட நேர்ந்துவிடும்.. எனினும் கவலைப்பட தேவையில்லை.. ஆன்லைனியே, பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்களை நாம் பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.. எந்தவித செலவும் இல்லாமல், நாமே இதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
2 முறைகள்: இப்படி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதில் 2 வகையான வழிமுறைகள் உள்ளன.. சென்னையில் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற வெப்சைட் மூலமாகவும், பிற பகுதிகளில் உள்ளவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற வெப்சைட் மூலமாகவும் சான்றிதழை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
- முதலில், அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்திற்கு சென்று, search என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு, சான்றிதழ் தமிழில் வேண்டுமானால், "சான்றிதழ் வகை" என்பதில் தமிழை கிளிக் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் வேண்டுமானால், "ஆங்கிலம்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, அனைத்து விவரங்களையும் சரியாக பதிவு செய்த பிறகு, "generate" என்பதை கிளிக் செய்தால், பிறப்பு சான்றிதழ் விவரங்கள் திரையில் தோன்றும். இதை கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அதேபோல, பிறப்பு சான்றிதழில் பிழை ஏதாவது இருந்தால், அந்த பிழையை உடனடியாக திருத்திவிடுவது நல்லது.. இதற்கு பிறப்பு பதிவாளரை அல்லது, சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் யாரையாவது அணுகலாம்.
பிறப்பு சான்றிதழ்: பிறப்பு சான்றிதழில் பிழையை திருத்த வேண்டும் என்று ஒரு மனுவை நீங்கள் தரவேண்டும். பிறகு, குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இணைத்து தந்தால் போதும். அவைகளை சரிபார்த்து, உங்கள் மனுவையும் ஏற்று, பிழையையும் திருத்தி தருவார்கள்.
அடுத்த மாதம் முதல் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது... வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி வளாகத்தில் சேருவதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருமண பதிவு, அரசு வேளைகளில் சேருவதற்கு என அனைத்திற்கு இனி ஒரே அடையாள ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நடவடிக்கை: இதற்கு முன்பு எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதாரை முக்கிய ஆவணமாக பயன்படுத்தி வந்தனர் பொது மக்கள்.. இப்போது, ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பாலினத்தை உறுதிப்படுத்தும் பிறப்பு சான்றிதழையும் இனி ஒரே ஆவணமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் 4 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications