விட்றாதீங்க.. ஆதார் கார்டு +பான் கார்டு + டிரைவிங் லைசென்ஸ்.. இதெல்லாம் வாட்ஸ்அப்ல இருந்தால் போதுமாம்
சென்னை: வாட்ஸ்அப் மூலமாகவே ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது..
அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது... ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன... முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.

அதாவது, ஆவணங்களை, டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதை அரசே அனுமதி அளிக்கிறது... ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திலும் அவைகள் இருக்க வேண்டும்... ஆதார் அட்டை , பான் கார்டு , டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை இப்போது ஸ்மார்ட்போனிலேயே பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மேலும், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்தியஅரசு..
தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலமாகவே அரசின் ஆவணங்களை டவுன்லோடு செய்து மொபைல் போனில் சேமித்து வைத்துக்கொள்வதற்கான வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கு நீங்கள் டிஜிட்டல் லாக்கர் என்ற கணக்கு வைத்திருக்க வேண்டியது முக்கியமாகும்.. ஒருவேளை, உங்களிடம் டிஜிட்டல் லாக்கர் கணக்கு இல்லையெனில் Digital Locker App அல்லது இதற்கான இணையதளத்தை பயன்படுத்தி டிஜிட்டல் லாக்கர் கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் லாக்கர் கணக்கை நீங்கள் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் MyGov Helpdesk என்பதை பயன்படுத்தி முக்கிய ஆவணங்களை உங்களின் வாட்ஸ்அப் மூலமாக மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.. அதற்கான வழிமுறைகள்தான் இவை:
- இதற்கு முதலில் +91 9013151515 என்ற MyGov Helpdesk-ன் எண்ணிற்கு Hi என டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.
- அதன் பிறகு Digital Locker சேவை மற்றும் WhatsApp goin என இரண்டு தேர்வுகள் திரையில் தோன்றும்.
- இதில் Digital Locker கணக்கை கிளிக் செய்து உங்களின் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள 12 இலக்கஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
- அதன் பின்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும்.
- இப்போது இந்த OTP எண்ணை உள்ளிட்டால் டிஜிட்டல் ஆக்கரில் சேமித்து வைத்துள்ள அரசின் ஆவணங்கள் ஒரு chartboard தோன்றும்.
- இப்போது நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் தேவையான அரசின் ஆவணங்களை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
- இப்போது உங்களின் ஆவணங்கள் PDF வடிவத்தில் தங்களின் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்படும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications