பான் கார்டு உங்ககிட்ட இருக்குல்லே.. ரூ.101 இருக்குல்லே.. ஜஸ்ட் 5 நிமிஷத்தில் இதை முடிங்க.. சிம்பிள்
சென்னை: 101 ரூபாய் இருந்தால் போதும்.. கொஞ்ச நேரத்தில், பான் கார்டில் நம்முடைய திருத்தங்களை செய்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா?
நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.
திருத்தங்கள்: இதனிடையே, பான் கார்டில் சிலர் மாற்றங்களை, திருத்தங்களை செய்ய நேரிடலாம்.. அட்ரஸ் உட்பட சில அடிப்படை விவரங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய தெரிந்த பலருக்கும் பான் கார்டில் எப்படி மாற்றங்களை செய்வது என்று தெரியாது.
பின்வரும் படிநிலைகளை பின்பற்றினால் பான் கார்டில் எளிமையாக மாற்றங்களை செய்ய முடியும். உதாரணமாக பான் கார்டில் முகவரியை ஆன்லைனில் எப்படி மாற்றுவது என்று இங்கே பார்க்கலாம்.
- முதலில் NSDL இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்பதை பார்க்க வேண்டும். அதன்பிறகு, அப்ளிகேஷன் டைப் ஆப்ஷனில் 'Change or Correction in PAN Data' என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்..
தேர்வு: பிறகு, "Category Type" என்பதை தேர்வு செய்து அதில் தனிப்பட்ட விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.. அடுத்ததாக, தேவையான விவரங்களை நாம் தந்து கொண்டேயிருக்க வேண்டும்.. அடுத்ததாக, "கேப்ட்சா" குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்கு பிறகு, புகைப்படம் அல்லது கையொப்பம் இல்லாமல் தந்தை அல்லது தாயின் விவரங்களை உள்ளிட வேண்டும். பின்பு, 'Next for PAN Card Signature Change or Photo Update' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு ஐடி, முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரத்தை இணைக்கும்படி கேட்க, அதனை இணைக்க வேண்டும். பிறகு செக்பாக்ஸை டிக் செய்து 'Submit' பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.இறுதியாக பணம் செலுத்தும் ஆப்சன் வரும், அதில் உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பான் கார்டில் மாற்றுவதற்கு ரூ.101 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும்.
பான் சேவா பிரிவு: நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்திய பிறகு, குறிப்பிட்ட செயல்முறையின் ஒப்புதலுக்காக 15 இலக்க எண்கள் வரும். பின்னர், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பான் சேவா பிரிவுக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் பெற்ற 15 இலக்க ஒப்புகை எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் விண்ணப்பம் அடைந்த நிலையைக் கண்காணிக்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications