வட்டி இல்லாமல் கடன் பெறுவது எப்படி என்பது தெரியுமா? ரூ. 60 ஆயிரம் வரை கடன் கிடைக்கும்!
சென்னை: வட்டி இல்லாமல் கடன் பெறுவது எப்படி என்பது தெரியுமா? அப்படியும் கடன் தருகிறார்களா என்றால் நிச்சயம் தருவார்கள். பேடிஎம் உங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை வட்டியில்லாத கடன் வழங்குகிறது. அதேநேரம் அமேசான் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் அவரவர் சிபில் ஸ்கோர் அடிப்படையில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கடன் தருகிறது.
கிரிடிட் கார்டில் பொருட்களை வாங்கிப்போட்டுவிட்டு வட்டி கட்ட முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள். மாதம் மாதம் குறைந்த பட்ச கட்டணத்தை கட்டிவிட்டு கடனை எப்படி கட்டி முடிப்பது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். கந்து வட்டிக்கு வாங்கியவர்கள் இப்போது அதனை கிரிடிட் கார்டு ரூபத்தில் அனுபவிக்கிறார்கள்.

கிரிடிட் கார்டு என்பது மோசம் என்று சொல்ல முடியாது. ஆனால் சரியாக பயன்படுத்தினால் அது பயன்படும் மாறாக ஆசைப்பட்டு எல்லாவற்றையும் செய்துவிட்டால் நிச்சயம் சிக்கல் தான்.
சரி விஷயத்திற்கு வருவோம். பேடிஎம் வழியாக வட்டி இல்லாமல் கடன் வாங்கும் வசதியை எப்படி தருகிறார்கள் என்பதை பார்ப்போம். முன்பெல்லாம் 3வட்டிக்கு , ஐந்து வட்டிக்கு கடன் வாங்கிய மக்கள், கடனை கட்ட முடியாமல் சொத்தை விற்ற கதைகள் ஏராளம்.
இப்போது ஆன்லைனில் வங்கிகளிடமே எளிதாக கடன் பெற முடியும். அவரவருக்கு திருப்பி செலுத்தும் தகுதி அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சுமாக கடனை தருகின்றன வங்கிகள். சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் இன்ஸ்டன்ட் லோனே தருகிறார்கள். அதற்கு எல்லாம் கண்டிப்பாக வட்டி வசூலிக்கப்படும். இந்த வட்டியையும் சிபில் ஸ்கோர் தான் தீர்மானிக்கிறது.
முன்பு நண்பர்களிடம் கைமாற்றாக பணம் வாங்கி சம்பளம் வந்ததும் மாற்றிவிடுவோம். அந்த திட்டத்தின் படியே பேஎடிஎம் அவசர கடன் தருகிறது. 'போஸ்ட்பெய்ட் மினி' என்று அழைக்கப்படும் இந்த சேவை, வாடிக்கையாளர்களுக்கு சிறிய அளவில் கடன்களை வழங்குகிறது.

பேடிஎம் நிறுவனம் ஆதித்யா பிர்லா ஃபினான்ஸ் லிமிட்டட் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து சுமார் 60 ஆயிரம் வரை கடனை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் குடும்ப செலவுகள், ரீச்சார்ஜ் முதல், டிடிஎச் ரீசார்ஜ், சிலிண்டர் புக்கிங், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை இந்த கடன் மூலம் செலுத்த முடியும். வாடிக்கையாளர்கள் ரூ.60 ஆயிரம் என்றில்லை, ரூ. 250 முதல் ரூ. 1000 வரையில் கூட கடன் பெற்றுக்கொள்ளலாம்.. இதுக்குறித்த கூடுதல் விவரங்களுக்கு பேடிஎம் ஆபில் இதுப்பற்றி தெரிந்து கொள்ளலாம். அந்த ஆப்பில் வட்டியில்லாத அந்த கடனை பெற நீங்கள் தகுதியானவாரா? என்ற தகவல்கள் அனைத்தையும் ஆப்பின் வழியே வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், பேடிஎம், அமேசான் உள்பட எந்த நிறுவனமாக இருந்தாலும் 30 நாட்களுக்கு திரும்பி செலுத்தும் வகையில் தான் வட்டியில்லா கடன் வழங்குகின்றன. அதற்கு மேல் என்றால் கண்டிப்பாக வட்டியை செலுத்த வேண்டும். அதாவது கிரிடிட் கார்டு போலவேத்தான் ஆனால் வட்டி கொஞ்சம் குறைவு தான்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications